நாங்க என்ன சொல்றோம்னா...: துரந்தர் தி ரிவென்ஜ் (ஹிந்தி)
நாங்க என்ன சொல்றோம்னா...: துரந்தர் தி ரிவென்ஜ் (ஹிந்தி)
PUBLISHED ON : மார் 22, 2026

'இந்திய உளவுத்துறை - பாகிஸ்தான் தீவிரவாதம்' இடையிலான குருஷேத்திரம்
பாகிஸ்தான் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள், தாதாக்கள், ஆயுத வியாபாரிகளின் கூட்டு வலையமைப்பிற்குள் இந்திய உளவாளியை ஊடுருவ வைத்து, தீவிரவாதத்தின் வேரில் நஞ்சு பாய்ச்சும் ஆப்பரேஷன் துரந்தரின் இரண்டாம் பாகம் இது; யுத்தத்தின் இறுதி அத்தியாயம்!
'டிஜிட்டல்' ஆதிக்கத்தால் மக்களின் கவனிப்பு திறன் மழுங்கி வரும் இன்றைய சூழலில், 229 நிமிடங்களுக்கு திரையில் இருந்து கண்களை விலக விடாமல் சாதித்திருக்கிறது படம். இரு பாகங்களுமாய் சேர்த்து சுமார் ஏழரை மணி நேரம் நீளும் இத்திரைக்கதையை ரத்தமும் சதையுமாக எழுதி இயக்கியுள்ள ஆதித்யா தர், இந்திய திரைப்பட வரலாற்றில் தன் பெயரை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார்.
உத்தரபிரதேசத்தில் குற்றப் பின்னணி நிறைந்த அட்டிக் அகமது களையெடுப்புக்கான காரணம்; மோடியின் பண மதிப்பிழப்பு அறிவிப்பால் தீவிரவாத திட்டங்களில் ஏற்பட்ட பின்னடைவு; பாகிஸ்தான் அரசுக்கு சம்மட்டி அடி கொடுத்த இந்தி ய ராணுவத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்; ப லரது ரத்த கொதிப்பை எகிற வைத்த உச்ச நீதிமன்றத்தின் 'பாபர் மசூதி' தீர்ப்பு உள்ளிட்ட நிஜங்களை, திரைக்கதை வழியே அசலாக காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.
கடந்த 2014ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நம் உளவுத்துறை எடுத்த முடிவுகள் எப்படி எல்லாம் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதன் ஆவணமாகக் கூட இப்படைப்பை கருதலாம்.
தெறிக்கும் தோட்டாக்கள், ஆபாச சொல்லாடல்கள், ரத்தம் சொட்டும் முகங்கள் என வன்முறை காட்சிகள் அதிகம். ஆனாலும், அரசு, உளவுத்துறை, ராணுவம் மூலம் நம் தேசத்தை பிரதமர் இயக்கும் பின்னணியை இனி திரையில் யார் காட்சிப்படுத்த நினைத்தாலும் இந்த துரந்தர் உயரத்தை எட் டிப் பிடிப்பது கடினம்.
ஆக...
பிரதமர் விதைத்து வரும் தேசப்பற்றின் விளைச்சலுக்கு சாட்சியாகிறது ரசிகர்களின் கரகோஷம்.
