sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: சம்பவம் அத்யாயம் ஒந்நு (மலையாளம்)

/

நாங்க என்ன சொல்றோம்னா...: சம்பவம் அத்யாயம் ஒந்நு (மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: சம்பவம் அத்யாயம் ஒந்நு (மலையாளம்)

நாங்க என்ன சொல்றோம்னா...: சம்பவம் அத்யாயம் ஒந்நு (மலையாளம்)


PUBLISHED ON : மார் 15, 2026

Google News

PUBLISHED ON : மார் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் காடு

பிரசவ அறை வாசலில் பரிதவிப்போடு காத்திருக்கும் தந்தைக்கு, அடுத்த சில நிமிடங்களில் பிறந்த தேவதையை கையில் ஏந்தும் வாய்ப்பு தவறிப் போகிறது. காரணம், அந்த ஆபத்தான காடு. 'மருத்துவமனையில் இருந்தவன் அந்த காட்டிற்குள் சென்றது எப்படி' என்பது 'க்ளைமாக்ஸ்' திருப்பம். அது வரை, நம் மூளையை பிழிந்து சாறு எடுக்கிறது திரைக்கதை!

இருள் காட்டில் ஒரு போர்ச் சுக் கீசிய பெண் திரைக் கதையின் துவக்கத்தில் வருவதற்கும், அதே பெண் இடை வேளைக்குப் பின்பான காட்சியில் வருவதற்கும் நம் ரசனையில் பெரும் வித்தியாசம்; இரண்டிலும் 'திகில்' உண்டெனினும், முதலாவது காட்சி அவளை ரசிக்கத் துாண்டுகிறது; இரண்டாவதோ, நம் உடலுக்குள் மின்சாரம் பாய்ச்சுகிறது!

இந்த அளவிற்கு மற்ற காட்சிகள் இல்லையெனினும், 'இந்த காட்டிற்குள் ஏதோ இருக்கிறது; ஏன் இப்படியெல்லாம் நிகழ்கிறது; அய்யோ... ரத்தம் சொட்டி விட்டதே; இவன் யார்... இவன் எதற்கு இங்கு வந்தான்; செத்தவன் எப்படி மீண்டும்; ஓ... இது ப்ளாஷ்பேக்; என்ன... இவன் அவனது மகனா; அய்யோ... ரொம்ப குழப்புறானுங்களே...' - இப்படியாக சிந்திக்கவும் புலம்பவும் வைத்து நம்மை இமைக்கவிடாது பார்த்துக் கொள்கிறது இயக்கம்!

முப்பது ஆண்டுகளுக்கு முன்பான சம்பவங்களோடு இன்றைய நிகழ்வுகளையும், நாளைய அதிர்ச்சியையும் நாயகனை வைத்து கோர்த்திருக்கும் கதையில் ஏ கப்பட்ட முடிச்சுகள்; நினைவை அவிழ்த்தால் நினைவு, நிகழ்வை அவிழ்த்தால் நிகழ்வு, கனவை அவிழ்த்தால் கனவு; எதை நாம் அவிழ்க்கிறோம் என்பதற்கேற்ப கதை நமக்கு விளங்கும்!

என்ன கதை; காடு தான் கதை... காடு ஆடும் கண்ணாமூச்சி ஆட்டமே கதை! காட்டிற்குள் தொலைந்து போக பெரும் விருப்பமுள்ளவர்களுக்கும், 'கதையின் 'க்ளைமாக்ஸ் முடிச்சு' இதுதான்' என இவ்விமர்சனத்தில் கண்டறிந்தவர்களுக்கும் படம் பிடிக்கும்.

ஆக...

'வதந்தியின் சூத்திரதாரி யார்' என சிந்திக்காது பெட்ரோல் நிரப்பியவர்களுக்கு இக்கதை புரியாது; பிடிக்காது






      Dinamalar
      Follow us