PUBLISHED ON : செப் 28, 2025

'ஜீத்து ஜோசப்' எனும் யானைக்கும் அடி சறுக்கும்!
பாடாவதி 'டிவி' தொடர்களைக் காட்டிலும் படுமட்டமாக துவங்கு கிறது கதை. 'அடிக்கடி வரும் கொண்டை ஊசி வளைவுகள் ரசிகனை கட்டிப் போட்டுவிடும்' எனும் ஜீத்துவின் நம்பிக்கை, திரைக் கதையால் கிறுகிறுத்து கிடக்கும் ரசிகனின் இமை மலர்த்த வில்லை!
' தம்பி க்கு பிறகு ஜீத்துவின் நாடகத்தனமான படைப்பு; இதில், நடிகர் சரவணன் வந்து போகும் காட்சிகளில் இந்த கொடுமை சற்று துாக்கல்; ம்ஹும்... அந்தந்த மண்ணில் அதற்குரிய செடி, கொடிகள் வளர்வதுதான் அழகு போலும்! எப்படியான நினைவாற்றல் கொண்டவ னாலும், 'இதுதான் கதை' என சொல்லிவிட முடியாது. அப்படி சொல்வதை ஜீத்து கேட்டால், 'ஓ... நீ அப்படி புரிந்து கொண்டாயா' என்று கேட்கக்கூடும்!
தவறானவனது ரகசியம் அடங்கிய 'ஹார்டு டிஸ்க்'கை பலபேரை வைத்து தேடுகிறது கதை; 'திடுக்' தர முயற்சிக்கும் காட்சி களுக்கு எல்லா பாத்திரங்களுமே காரணமாகி இருக் கின்றன; எதிலும் ஈர்ப்பில்லை!
விருந்தில் பரிமாறப்பட்ட ஏராளமான பதார்த் தங்களை ருசிக்க அமர்ந்தவனை, 'போதும்... போதும்... கைகழுவி விடு; மீண்டும் அழைக் கையில் வந்து சாப்பிடு' என்று சொல்வதை, அதையும் அடிக்கடி சொல்வதை ரசிக்க முடியுமா; தான் உருவாக்கிய பாத்திரங் களின் கையிலிருக்கும் தான் பரி மாறிய பதார்த் தங் களை, ஜீத்து ஜோசப் இப்படித்தான் அடிக்கடி பிடுங்கி இருக்கிறார்; இந்த விளையாட்டால் ஜவ்வ்வ்....வாய் இழுக்கிறது படம்!
'கயவனை பிடிக்கும் இம்முயற்சியை காவல் துறை நினைத்தால் சாதித்திருக்க இயலாதா' என்ற கேள்வி படம் முடிந்தபின் எழுகிறது. இதற்கு பதில் தேடி காட்சிகளை நினைவூட்டும் முயற்சியில் இறங்கினால், வீட்டிற்கு செல்லும் வழி மறந்து போவது நிச்சயம்.
ஆக....
'மலையாள சினிமா தரமில்லை' என்றாலும், 'குற்றம் குற்றமே' என 'உண்மையின் உரைகல்' உரக்கச் சொல்லும்!