sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

அவியல்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: மை லார்ட்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: மை லார்ட்

நாங்க என்ன சொல்றோம்னா...: மை லார்ட்

நாங்க என்ன சொல்றோம்னா...: மை லார்ட்


PUBLISHED ON : பிப் 15, 2026

Google News

PUBLISHED ON : பிப் 15, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீண்டும் மனிதம் போற்றுகிறார் சசிகுமார்

'டயாலிசிஸ்' தயவில் வாழும் மத்திய அமைச்சருக்கு சிறுநீரகம் தரும் தகுதி கோவில்பட்டி முத்து சிற்பிக்கு மட்டுமே இருக்கிறது; எலி பிடிக்க பொறியில் வைக்கப்படும் வடையாக முத்து சிற்பி மற்றும் அவரது மனைவி சுசீலாவுக்கு பலவித சேவகம் செய்கிறது அமைச்சர் தரப்பு; பொறியில் சிக்கியது என்ன?

'தங்களின் உரிமைக்காக கவுன்சிலர் முதல் அரசு மருத்துவர்கள் வரை நிற்கும் சாமானியர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்படுகின்றனர்' என்கிற ஜோக்கர் பட அரசியலை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்; வசனம், கதாபாத்திர வார்ப்பு அனைத்திலும் அதிகார மையத்தினரை பகடி செய்திருக்கிறார்!

அன்றாட வாழ்வில் உழைப்பு ரீதியிலும், உரிமைரீதியிலும் சுரண்டப்படும் மக்கள் டாஸ்மாக், 'ரீல்ஸ்' என்று கரைந்து போவது; 'நேர்மையின் வழியில் பயணப்படுவதை விட குறுக்கு வழிகளை விரும்பும் மக்களின் மனங்கள்' பற்றி சொல்லும் காட்சிகள்... இன்றைய சமூக யதார்த்தத்தின் 100 சதவீத பிரதிபலிப்பு!

முத்து சிற்பிக்கான ஒப்பனையில் சசிகுமார் தெரிந்தாலும், ஏதோவொரு தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சி அடுக்கும் சுசீலாவாகவே தெரிகிறார் சைத்ரா. சுவாரஸ்யமான கதையோட்டத்தின் இடையே எட்டிப் பார்க்கும் திரைக்கதை தொய்வு, இக்கதையிலும் தலை நீட்டுகிறது. இரண்டாம் பாதி திருப்பத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது ஒரு குறை!

'காய்வதில்லை பூமியிலே கருணை ஆற்றின் ஈரம்...' எனும் யுகபாரதியின் வரிகளை இன்னும் ஈரமாக்கித் தருகிறது ஷான் ரோல்டனின் இசை. ஏழைகளின் வாழ்வை சிதிலமடைந்த தோற்றத்தில் காட்டாமல், அவர்களின் எளிமையை அழகியலாக காட்டியிருக்கிறது நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு!

ஜப்பான் ஏற்படுத்திய காயத்தின் மீது களிம்பு பூசியிருக்கிறார் ராஜு முருகன். கோபம் கொண்டு அதிகார வர்க்கத்தை எதிர்க்காத இக்கருணை கதையை மென்மை விரும்பிகள் போற்றலாம்.

ஆக...

ரூ.5,000, 10 ஆயிரம் எதற்கும் மயங்காத மனங்களை மயக்கும் படைப்பு இது






      Dinamalar
      Follow us