PUBLISHED ON : செப் 21, 2025

பெரும் மலையும் சிறு உளியும்!
ஆட்சியாளர்களை தன் கைக்குள் வைத்திருக்கும் அரசியல் சாணக் கியன் அபயங்கர். அவர் வீட்டில் வேலை செய்த கிட்டு அரசியல் தரகராகி அபயங்கருக்கு எதிராக திரும்ப... கிட்டு என்னவானான்?
கதை தேர்வில் ஜெயித்து நடிப்பில் கோட்டை விடும் விஜய் ஆன்டனி, தன் 25வது படமான இதிலும் கிட்டுவாக அதையே செய்திருக்கிறார்! காதல் ஓவியம் கண்ணனாக நமக்கு அறிமுக மான சுனில் கிருப்லானி இதில் அபயங் கர்; அதிகார வர்க் கத்தை இயக்கும் பெரும் புள்ளி களின் தந்திரங்களை அள்ளித் தரும் அற்புத மான நடிப்பு! நாயகி த்ருப்தி ரவிந்திராவிற்கு வசனங் கள் இல்லை; அதனால் என்ன... முகபாவம் நின்று பேசுகிறது!
அருவி, வாழ் படங்களைத் தந்த இயக்குனர், சமகால பிரச்னையான புவிசார் அரசியலை இதில் தொட்டிருக்கிறார்; தமிழகத்தில் அரை நுாற்றாண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வரும், 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' பிரசாரத்தை தன் அறிவுக்கு எட்டியவரை அலசி இருக்கிறார்.
அலைபேசியில் பேசும் முதல்வர் மனைவியி டம், 'அகிலம் ஆளும் அம்மா...' என புகழ்பாடும் அறநிலையத்துறை அமைச்சர், தனது முதுகின் வளைவு தன்மையை கும்பிட்டு நிரூபிக்கும் மற்றொரு அமைச்சர் என நிஜத்தின் சாயல் கொண்ட சில பாத்திரங்கள், சமகால அரசியலின் 'நறுக்' நையாண்டிகள்!
அருண் பிரபு புருஷோத்தமனின் இயக்கத்தில் கதைக்கான தகவல்கள் 'ஓவர் டோஸ்' மாத்திரை யாக வினைபுரிந்து விட்டன. இரண்டாம்பாதி திரைக்கதை, இயக்குனரின் வசதிக்கேற்ப ஏகத் துக்கும் வளைந்திருக்கிறது!
இருப்பினும், 'நல்ல கதை' என்ற வகையில் இயக்குனருடன் சேர்ந்து விஜய் ஆன்டனியும் வழக்கம்போல் தப்பித்து விட்டார்.
ஆக...
நாங்கள் படம் பார்க்க வருவதே பிரச்னைகளை மறக்கத்தான்; இங்கேயுமா... அடப்போங்கய்யா!