sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

அவியல்

/

நாங்க என்ன சொல்றோம்னா...: தே கால் ஹிம் ஓஜி (தெலுங்கு)

/

நாங்க என்ன சொல்றோம்னா...: தே கால் ஹிம் ஓஜி (தெலுங்கு)

நாங்க என்ன சொல்றோம்னா...: தே கால் ஹிம் ஓஜி (தெலுங்கு)

நாங்க என்ன சொல்றோம்னா...: தே கால் ஹிம் ஓஜி (தெலுங்கு)


PUBLISHED ON : செப் 28, 2025

Google News

PUBLISHED ON : செப் 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கேங்ஸ்டர்' நாயகர்கள் பட்டியலில் இணைந்திருக்கும் பவன் கல்யாண்!

ஜப்பானில் இருந்து கடல்மார்க்கமாக திருட்டுத்தனமாய் இந்தியாவிற்கு வருகிறான் ஓஜாஸ் கம்பீரா; அவன் இப்படி மும்பை வர உதவும் கடத்தல்காரரான சத்யாவிற்கு தன் நன்றிக்கடன் தீர்க்கும்வகையில் , மும்பை துறைமுகத்தை அவரது கைக்கு கொண்டு வருகிறான் கம்பீரா! தொடர்ந்து நிகழும் ஆயுத கடத்தல் பிரச்னையில் கம்பீரா காட்டும் ரத்த களறியே படம்!

ஹரி ஹர வீர மல்லு படத்தில் தனது ரசிகர் களை காயப்படுத்திய பவன் கல்யாண், இதில் அதற்கு மருந்து போட்டி ருக்கிறார். ஆக்ரோஷமாக வரும் எதிரிகளை சாமுராய் கத்தி யுடன் ஒற்றை ஆளாய் நின்று அந்தரத்தில் பறக்க விடுவது, போலீஸ் முதல் அரசியல்வாதி வரை தனது பேரைக் கேட்டதும் குலை நடுங்கச் செய்வது என 'மாஸ்' காட்டியிருக்கிறார்!

வில்லன் உட்பட படத்தின் எல்லா பாத் திரங் களும் பவன் கல்யாணை புகழ்ந்து தீர்ப்பதால், அவரது 'நடிகர்' அடையாளத்தை முந்திச் சென்று நம்மிடம் பல் காட்டுகிறது ஆந்திர 'துணை முதல்வர்' அந்தஸ்து! இந்த வித்தைகளுக்கு பக்கபலமாய் நின்று உதவி இருக்கின்றன ஒளிப் பதிவும் இசையும்!

தெலுங்கு திரையுலகிற்கு ஒரு சர்வதேச கேங்ஸ்டர் கதையைக் கூறி புதிய மசாலா பாணிக்கு பாதை அமைத்திருக்கிறார் இயக் குனர் சுஜீத். எல்லா துணை பாத்திரங்களும் தமிழக அரசியல் வாதிகளைப் போல் ஒரு குட்டி கதை சொல்வது விறுவிறுப்பான கதைக்கு ஆங்காங்கே வேகத்தடை அமைத்திருக்கிறது.

'துணை முதல்வருக்கு இதெல்லாம் தேவையா' என முகம் சுளிக்க வைக்காது, பவன் கல்யாணை படு ஸ்டைலான கேங்ஸ்டராக காட்டியதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் .

ஆக....

'ஆந்திரா மீல்ஸ்' உடன் மிளகாய் துவையல் சேர்த்து ருசிக்கும் பழக்கம் இருப்பின் இதுவும் பிடிக்கும்!






      Dinamalar
      Follow us