PUBLISHED ON : ஜூன் 15, 2026

1. நாம் கொடுக்கும் இசை வகை (Genre), பாடகர் (Artist) மற்றும் பாடல் வரிகளை (Lyrics) அடிப்படையாகக் கொண்டு, முற்றிலும் புதிய பாடல்களையும் அதற்கான இசையமைப்பையும் உருவாக்கும் ஓப்பன் ஏஐயின் நியூரல் நெட்வொர்க் ஆராய்ச்சி இசை மாடல் எது?
2. நாம் கொடுக்கும் எழுத்து வடிவ விளக்கத்தைக் கேட்டு (Text Prompt), 3D பிரின்டிங் மற்றும் வீடியோ கேம்களில் பயன்படுத்தக்கூடிய முப்பரிமாண வடிவங்களை (3D Models) உருவாக்கித் தரும் ஒப்பன் ஏஐயின் தொழில்நுட்பம் எது?
3. ஒரு பயனர் எழுதும் ப்ராம்ப்ட் (Prompt) வன்முறை, வெறுப்புப் பேச்சு அல்லது ஆபத்தான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளதா என்பதை நொடிப்பொழுதில் கண்டறிந்து அதைத் தடுக்கும் ஒப்பன் ஏஐயின் பாதுகாப்பு ஏஐ கருவி எது?
4. நாம் பேசுவதைக் கேட்டு, அதில் உள்ள வார்த்தைகளை அப்படியே துல்லியமாக எழுத்து வடிவில் (Speech-to-Text) மாற்றித் தரும் ஓப்பன் ஏஐயின் பிரபலமான ஏஐ கருவி எது?
5. நிரலாளர்கள் (Programmers) பாதி குறியீட்டை டைப் செய்யும்போதே, அடுத்த வரியை அதுவாகவே யூகித்து எழுதிக் கொடுக்கும் ஒப்பன் ஏஐயின் ஏஐ மாடல் எது?
விடைகள்:
1. ஒப்பன் ஏஐ ஜூக்பாக்ஸ் [Open Al Jukebox
2. பாயிண்ட்டு (PointE) அல்லது ஷேப்இ [ShapE]
3. மாடரேஷன் ஏபிஐ [Moderation API]
4. ஒப்பன் ஏஐ விஸ்பர் [OpenAl Whisper]
5. ஓப்பன் ஏழு கோடெக்ஸ் [OpenAI Codex]
