PUBLISHED ON : பிப் 09, 2026

கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு இணைகளில் மூன்று சரியான இணைகளும், ஒரு தவறான இணையும் இருக்கும். நீங்கள் தவறான இணையைக் கண்டறிய வேண்டும்.
1. வேதியியல் பெயர்களில் தவறான இணை எது?
அ. ரொட்டிச் சோடா (Baking Soda) - NaHCO
ஆ. சலவைச் சோடா (Washing Soda) - CO
இ. சலவைத்தூள் (Bleaching Powder) - CaOCl
ஈ. சுட்ட சுண்ணாம்பு (Quicklime) - CaCO3
2. அலோகங்களின் (Non-metals) இயற்பியல் பண்புகளில் தவறான இணை எது?
வைரம் - கடினமான அலோகம்
புரோமின் - திண்ம நிலை அலோகம்
அயோடின் - பளபளப்பான அலோகம்
கிராஃபைட் - மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
3. வாயுக்களின் முக்கியப் பண்புகளின் அடிப்படையில் தவறான இணை எது?
கார்பன் டை ஆக்சைடு - தீயை அணைக்கும் பண்பு
ஆக்சிஜன் - சூரியனின் முதன்மை எரிபொருள்
குளோரின் - கிருமி நாசினியாக (நீர் சுத்திகரிப்பு)
நைட்ரஜன் - உணவுப் பொருட்களைப் பதப்படுத்தல்
4. அமிலங்கள் நிறைந்துள்ள பொருட்களின் அடிப்படையில் தவறான இணையைக் காண்க.
தக்காளி - சிட்ரிக் அமிலம்
தயிர் - லாக்டிக் அமிலம்
வினிகர் - அசிட்டிக் அமிலம்
ஆப்பிள் - மாலிக் அமிலம்
விடைகள்:
1. ஈ, சுட்ட சுண்ணாம்பின் வேதியியல் குறியீடு - CaO.
2. ஆ, புரோமின், திரவ நிலையில் காணப்படும் ஒரே அலோகம்.
3. ஆ, சூரியனின் முதன்மை எரிபொருள் - ஹீலியம், ஹைட்ரஜன்.
4. அ, தக்காளியில் ஆக்ஸாலிக் அமிலமே உள்ளது.

