PUBLISHED ON : பிப் 23, 2026

1. ஒருவரின் உருவத்தைக் கேலியாகவோ, நகைச்சுவையாகவோ, முக அமைப்புகளைச் சற்று மிகைப்படுத்தியோ வரையும் கலையின் பெயர் என்ன?
2. உருளை வடிவிலான கண்ணாடி அல்லது ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே உருவம் சரியாகத் தெரியும்; மற்றபடி சிதைந்ததாகத் தோன்றும் கலையின் பெயர் என்ன?
3. சிறிய கண்ணாடித் துண்டுகள், கற்கள், வண்ண ஓடுகள் அல்லது செராமிக் துண்டுகளை ஒரு தளத்தில் ஒன்றாக இணைத்து உருவங்களை அல்லது சித்திரங்களை உருவாக்கும் கலையின் பெயர் என்ன?
4. சாதாரணக் கோடுகளுக்குப் பதிலாக, ஆயிரக்கணக்கான சிறு சிறு புள்ளிகளை ஒருங்கிணைத்து ஒரு முழுமையான ஓவியத்தை உருவாக்கும் கலையின் பெயர் என்ன?
5. வட்ட வடிவத்திற்குள் சிக்கலான வடிவியல் (Geometric) கோடுகள் மற்றும் சமச்சீரான அமைப்புகளைக் கொண்டு வரையப்படும் கலையின் பெயர் என்ன?
விடைகள்:
1. கேலிச்சித்திரம் (Caricature)
2. அனமார்போசிஸ் (Anamorphosis)
3. மொசைக் கலை (Mosaic Art)
4. பாயின்டிலிசம் (Pointillism)
5. மண்டலா கலை (Mandala Art)

