sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

கலைக்கூடம்: இது எந்த நடனம்?

/

கலைக்கூடம்: இது எந்த நடனம்?

கலைக்கூடம்: இது எந்த நடனம்?

கலைக்கூடம்: இது எந்த நடனம்?


PUBLISHED ON : மே 05, 2026

Google News

PUBLISHED ON : மே 05, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. ஜப்பான் நாட்டின் பாரம்பரிய நடனம் இது. கபூகி (Kabuki) நாடகக் கலையிலிருந்து உருவானது. முகத்தில் வெள்ளை வண்ணம் பூசி, மயோகி (Maiogi) எனப்படும் விசிறியைக் கையில் ஏந்தி மெதுவாகவும் அழகாகவும் ஆடும் நடனத்தின் பெயர் என்ன?

2. 'மாவோரி' (Maori) என்ற நியூசிலாந்து நாட்டு பழங்குடியின மக்கள், போருக்குச் செல்லும் முன்பு எதிரிகளை அச்சுறுத்தக் கண்களை உருட்டி, நாக்கை நீட்டி ஆடும் நடனத்திற்கு என்ன பெயர்?

3. மகாராஷ்டிர மாநிலத்தின் துடிப்பான நாட்டுப்புற நடனம் இது. 'டோல்கி' எனப்படும் மேளத்தின் அதிரடி தாளத்திற்கு ஏற்ப, நவாரி (Nauvari) எனப்படும் ஒன்பது கஜம் புடவையைக் கட்டி பெண்கள் ஆடும் நடனத்தின் பெயர் என்ன?

4. கேரளத்தின் பெண் கலைஞர்களால் மட்டும் ஆடப்படுவது இது. கேரளா கசவு (Kasavu) எனப்படும் வெள்ளை மற்றும் தங்க நிறக்கரை கொண்ட புடவை அணிந்து நிலவு வெளிச்சத்தில் ஆடுவது போன்ற தோற்றத்தைக் கொண்ட நடனம் எது?

5. அயர்லாந்து நாட்டின் பாரம்பரிய நடனம் இது. இதில் நடனக் கலைஞர்கள் கைகளை உடலோடு ஒட்டி வைத்துக்கொண்டு கால்களை மட்டும் மிக வேகமாக இயக்கி நடனமாடுவர். இந்த நடனத்தின் பெயர் என்ன?

விடைகள்:

1. நிஹோன் புயோ (Nihon Buyo)

2. ஹக்கா (Haka)

3. லாவணி (Lavani)

4. மோகினியாட்டம் (Mohiniyattam)

5. ஐரிஷ் ஸ்டெப் டான்ஸ் (Irish Step Dance)






      Dinamalar
      Follow us