sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அழகு ஆங்கிலம்: கெத்து வார்த்தைகள்

/

அழகு ஆங்கிலம்: கெத்து வார்த்தைகள்

அழகு ஆங்கிலம்: கெத்து வார்த்தைகள்

அழகு ஆங்கிலம்: கெத்து வார்த்தைகள்


PUBLISHED ON : அக் 13, 2025

Google News

PUBLISHED ON : அக் 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேசும்போது சில வார்த்தைகளைச் சொன்னால், 'அட, இந்தப் பையனுக்கு / பொண்ணுக்கு வித்தியாசமான வார்த்தை எல்லாம் தெரியுதே... நல்லா இங்கிலீஷ் தெரிஞ்ச ஆளு' என்று பாராட்டுவர். அப்படிப்பட்ட சில வார்த்தைகளையும் அவற்றிற்கான பயன்பாட்டையும் இங்கே பார்ப்போம்.

* ஒரு விஷயம் இப்போதுதான் நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அது ஏற்கெனவே இதே மாதிரி நடந்ததைப் போலவும் அதை நீங்கள் பார்த்தது போலவும் ஓர் உணர்வு தோன்றும். இந்த உணர்வுக்கு Deja vu என்று பெயர்.

* பிறர் முன்னால் செய்யக்கூடாத சமூகத் தவறு அல்லது தர்மசங்கடமான செயலை Faux pas என்று சொல்லலாம்.

* 'எருதின் நோய் காக்கைக்குக் கொண்டாட்டம்' என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. பிறரின் துன்பத்தில் இன்பம் காண்பது சிலரின் இயல்பாக இருக்கும். ஒருவர் வழுக்கி விழுந்துவிட்டால், பார்ப்பவர்களுக்குச் சிரிப்பு வருகிறதே, அது இந்த வகையில் வரும். அப்படிப் பட்ட சந்தோஷம், Schadenfreude என்று குறிக்கப்படுகிறது.

* 'ஒரு சந்தோஷமான நாள். இந்த நாளை விட்டுவிடாதீர்கள். முழுக்கக் கொண்டாடுங்கள். இந்த விநாடியில் வாழுங்கள்' என்று சொல்வதை, Carpe diem எனலாம்.

* தடைவிதிக்கப்பட்ட அல்லது ஒதுக்கிவைக்கப்பட்ட ஓர் ஆளை Persona non grata என்கிறார்கள். தமிழில் 'அழையா விருந்தாளி' என்பதை இதற்கு இணையாகச் சொல்லலாம்.






      Dinamalar
      Follow us