PUBLISHED ON : நவ 17, 2025

இடியம் என்றால் உங்களுக்குத் தெரியும். மரபுத் தொடர். காலகாலமாக ஒரு குறிப்பிட்ட பொருளில் சொல்லப்படும் சொற்றொடர்.
காமெடியாக ஒலிக்கும் சில இடியம்களை இங்கே பார்ப்போம்.
* 'பன்றிகள் பறக்கும்போது' என்று சொன்னால் என்ன புரிகிறது? 'When pigs fly.' இந்தத் தொடருக்கு, 'நடக்கவே நடக்காத ஒரு விஷயம்' என்று பொருள். அதாவது, Something that will never happen.
* 'புத்தகத்தை அடி.' அதை அடிப்பதால் ஏதேனும் பயன் உண்டா? 'Hit the books.' இதை அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. 'நன்றாகப் படி' என்பதைத்தான் (Study hard) அப்படிச் சொல்கிறார்கள்.
* வாளியை உதைத்தால் பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். ஆனால், 'Kick the bucket' என்றால் 'Die' என்று அர்த்தம். இறந்துபோவது.
* இதைவிடக் கொடுமையான இன்னொன்று: 'Hit the nail on the head.' தலையில் ஆணி அடிப்பதாவது... என்று நினைக்காதீர்கள். ஒரு கருத்தைச் சொல்லும் போது மிகவும் கரெக்டாகச் சொல்வது, கரெக்டாக நடந்து கொள்வது hitting the nail on the head. அதாவது Being exactly right.
* Butterfly in my stomach. 'என் வயிற்றில் பட்டாம்பூச்சி' என்பதும் வித்தியாசமான ஒன்றைக் குறிக்கும். டென்ஷனாக இருப்பதை அப்படிச் சொல்வார்கள்.

