sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஏப்ரல் 28, 2026 ,சித்திரை 15, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்

/

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்

சரித்திர சங்கமம்: சரித்திரக் குறிப்புகள் எழுதிய திவான்


PUBLISHED ON : ஏப் 27, 2026

Google News

PUBLISHED ON : ஏப் 27, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பூரில் சென்னை டுபரம் பூரில் கடம் பிள்ளை என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் இவர். இவரது உறவினர் பாண்டிச்சேரியில் அரசு பதவியில் இருந்தார். இதனால் குடும்பம் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்தது. உறவினரின் உதவியால் பாண்டிச்சேரியில் வணிகத்தில் ஈடுபட்டார் திருவேங்கடம் பிள்ளை.

விரைவிலேயே பாண்டிச்சேரியின் திவான் (உயர் அதிகாரி) பொறுப்பும் அவருக்குக் கிடைத்தது. தந்தையின் வழிகாட்டுதலில் இவரும் வணிகத்தில் ஈடுபட்டார். மக்கள் செல்வாக்குமிக்கவராக மாறினார். தந்தையின் மறைவிற்குப் பிறகு பாண்டிச்சேரி திவான் பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.

பாண்டிச்சேரி ஆளுநர் டூப்ளேயின் தலைமை மொழிபெயர்ப்பாளராக (துபாஷி) இவர் நியமிக்கப்பட்டார். ஆலோசகராகவும் இருந்தார். துணி வர்த்தகமும் செய்தார். அச்சுக்கூடங்களை நடத்தினார். 'ஆனந்தப் புரவி' என்ற கப்பலை வாங்கி, ஐரோப்பிய, சீன நாடுகளுடன் வர்த்தகமும் செய்தார்.

இலக்கியவாதியான இவர், புலவர்களை ஆதரித்தார். இவர் தமிழ், தெலுங்கு, உருது, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர். நாட்குறிப்பு எழுதுவதையும் வழக்கமாகக் தக கொண்டிருந்தார். இது பின்னர் சரித்திர ஆவணமானது. தங்கள் நூல்களை இவருக்குச் சமர்ப்பணம் (அர்ப்பணிப்பு) செய்து, பல புலவர்கள் வெளியிட்டனர்.

வணிகர்கள் தங்குவதற்கு விடுதிகளையும் வழிப்போக்கர்கள் தங்குவதற்குச் சத்திரங்களையும் கட்டினார். 1761 ஜனவரி 11இல் இயற்கை எய்தினார்.

யார் இவர்?

விடை: ஆனந்தரங்கம் பிள்ளை.






      Dinamalar
      Follow us