PUBLISHED ON : பிப் 02, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே தரப்பட்டுள்ள கேள்விகளுக்கு நான்கு விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வேதியியல் பண்புகளின் அடிப்படையில் இவற்றில் ஒன்று பொருந்தாது. அதைக் கண்டறியுங்கள்!
1. மின்கடத்தும் திறனின் அடிப்படையில் பொருந்தாதது எது?
வெள்ளி (Ag) தாமிரம் (Cu) கந்தகம் (S) அலுமினியம் (Al)
2. கதிர்வீச்சுப் பண்புகளின் அடிப்படையில் பொருந்தாதது எது?
யுரேனியம் (U) ரேடியம் (Ra) தோரியம் (Th) மெக்னீசியம் (Mg)
3. ஹாலஜன் (Halogen) குடும்பத்துடன் சேராதது எது?
குளோரின் (Cl) புரோமின் (Br) அயோடின் (I) கால்சியம் (Ca)
4. காந்தப் பண்பின் அடிப்படையில் பொருந்தாதது எது?
இரும்பு (Fe) கோபால்ட் (Co) நிக்கல் (Ni) அலுமினியம் (Al)
விடைகள்:
1. கந்தகம்
2. மெக்னீசியம்
3. கால்சியம்
4. அலுமினியம்

