PUBLISHED ON : ஜன 19, 2026

அருகே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா பொய்யா எனச் சொல்லுங்கள்.
1. 'சர்சோன் டா சாக்' (Sarson da Saag), 'மக்கி டி ரொட்டி' (Makki di Roti) ஆகியவை பஞ்சாப் மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுகள்.
2. 'வடா பாவ்' (Vada Pav) என்பது தெலங்கானா மாநிலத்தின் முக்கியமான தெருவோர உணவு (Street Food).
3. குஜராத்தின் பிரபலமான சிற்றுண்டி 'தோக்ளா' (Dhokla).
4. 'பிசிபேலே பாத்' (Bisi Bele Bath) என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகையைச் சேர்ந்தது.
5. 'லிட்டி சோக்கா' (Litti Chokha) என்பது பீகார் மாநிலத்தின் மிக முக்கியமான, சத்தான உணவாகும்.
விடைகள்:
1. சரி, இது பஞ்சாப்பின் குளிர் காலத்திற்கு ஏற்ற புகழ்பெற்ற உணவாகும்.
2. தவறு, இது மகாராஷ்டிர மாநிலத்தின் (குறிப்பாக மும்பை) புகழ்பெற்ற உணவாகும்.
3. சரி, இது கடலை மாவைக் கொண்டு ஆவியில் வேகவைக்கப்படும் குஜராத்தி உணவு.
4. தவறு, இது கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய பருப்பு கலந்த சாதம்.
5. சரி, இது பீகார், ஜார்க்கண்ட், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் முக்கிய உணவு.

