புவியியல் புதுமை: வேகக் காற்றுக்கு வெவ்வேறு பெயர்கள்
புவியியல் புதுமை: வேகக் காற்றுக்கு வெவ்வேறு பெயர்கள்
PUBLISHED ON : டிச 01, 2025

புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் இந்தியாவில் 2004ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. 2000ஆம் ஆண்டு ஓமன் நாட்டில் நடந்த உலக வானிலை அமைப்பு, வங்காள விரிகுடா, அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயரிட கொள்கை அளவில் ஒப்புக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, பெயர் சூட்டும் நடைமுறை தொடங்கியது. ஆரம்பத்தில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய 8 உறுப்பு நாடுகள் பரிந்துரைத்த பெயர்கள் பட்டியலாக வழங்கப்பட்டன. இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டன.
2018-இல் ஈரான், கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய நாடுகள் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போது இந்தப் பட்டியலில் 13 நாடுகள் உள்ளன. புயல்களை எளிதாக அடையாளம் காணவும், பொதுமக்கள், புயலை எச்சரிக்கையுடன் அணுகவும் இந்தப் பெயர் சூட்டும் முறை கொண்டுவரப்பட்டது. புயல் தீவிரம் அடைந்ததும், பெயர் நடைமுறைக்கு வருகிறது.
தற்போதைய புயலின் பெயர் 'டிட்வா' (Ditwah). ஏமன் நாடு வழங்கிய பெயர். தமிழில் முரசு, நீர் என்னும் புயல் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

