PUBLISHED ON : அக் 27, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் மெய்யா, பொய்யா என்று கண்டுபிடியுங்கள்.
1) அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியை விட மெக்சிகோ நாடு சிறியது.
2) சனிக் கோளுக்கு அருகில் சென்ற முதல் விண்கலம் அமெரிக்காவின் பயோனீர் 11.
3) இத்தாலி ஒரு தீபகற்ப நாடு.
4) சிரியாவும் துருக்கியும் அண்டை நாடுகள்.
5) தஜிகிஸ்தான் நாடு ஆப்கானிஸ்தானுக்குத் தெற்கில் அமைந்துள்ளது.
விடைகள்:
1) பொய். மெக்சிகோ அலாஸ்காவை விடப் பெரியது.
2) மெய்
3) மெய்
4) மெய்
5) பொய். ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே அமைந்துள்ளது.

