PUBLISHED ON : அக் 13, 2025

'இந்த நாட்டில் மனிதர்கள், காட்டு மாட்டின் மீது பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கிறார்கள். அதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். போருக்குச் செல்லும் போது, காட்டு மாடுகளின் முடியில் சிலவற்றைத் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். குதிரை வீரர்கள் இந்த மாட்டு முடியில் கொஞ்சம் எடுத்துத் தங்கள் குதிரையின் பிடரியில் கட்டுகிறார்கள். காலாட்படையினர் முடியைத் தங்கள் கேடயங்களில் கட்டிக்கொள்கிறார்கள். அல்லது தங்கள் குடுமியில் முடிச்சுப் போட்டுக் கட்டிக்கொள்கிறார்கள்.
இந்த முடி, அவர்களை எல்லா வகையான ஆபத்துகளிலிருந்தும் பாதுகாப்பதாக நினைக்கிறார்கள். துன்பங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும் நம்புகிறார்கள். அரசரின் படையில் சேரும் வீரர்கள் அனைவரும், இதைப் பின்பற்றுகிறார்கள். இது போன்ற நம்பிக்கையின் விளைவாக, காட்டு மாடுகளின் முடிக்கு, இங்கே நல்ல தேவையும் மதிப்பும் இருக்கிறது. மாட்டின் முடி இல்லாத மனிதர்கள் பாதுகாப்பற்றத் தன்மையுடனே இருக்கிறார்கள். அந்த முடி இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருப்பதாக நம்புகிறார்கள்'.
இது ஒரு வெளிநாட்டுப் பயணியின் குறிப்பு. பதின்மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவிற்கு வந்தார். 'மாபார்' (Maabar) என்று அவர் தென்னிந்தியப் பகுதிகளை அழைத்தார். யார் அந்த வெளிநாட்டுப் பயணி? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவர் எழுதிய நூல் எது?
விடைகள்: மார்க்கோ போலோ (Marco Polo), இத்தாலி(வெனிஸ்) நாட்டைச் சேர்ந்தவர். மார்க்கோ போலோவின் பயணக்குறிப்புகள் (The travels of Marco Polo).