இசையோடு இணைவோம்: இசையமைக்க உதவும் குரொமாட்டிக் ஸ்கேல்
இசையோடு இணைவோம்: இசையமைக்க உதவும் குரொமாட்டிக் ஸ்கேல்
PUBLISHED ON : ஜன 12, 2026

1. இசை இலக்கணத்தில் குரொமாட்டிக் ஸ்கேல் என்றால் என்ன?
ஒரு ஆக்டேவில் உள்ள ஷார்ப், பிளாட் உள்ளிட்ட அனைத்து ஸ்வரங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமை பெற்ற ஸ்கேல் ரகம்.
2. குரொமாட்டிக் ஸ்கேலின் 12 ஸ்வரங்கள் என்னென்ன?
C, C# (சி ஷார்ப்), D, D# (டி ஷார்ப்), E, F, F# (எஃப் ஷார்ப்), G, G# (ஜி ஷார்ப்), A, A# (ஏ ஷார்ப்), B, CE, B ஸ்வரங்களுக்கு ஷார்ப் கிடையாது.
3. குரொமாட்டிக் ஸ்கேலுக்கு எதிரான ஸ்கேல் எது?
டியடோனிக் ஸ்கேல். இதில் மேஜர், மைனர் மாறுபாடுகள் உண்டு. இதில் அனைத்து ஸ்வரங்களும் வராது.
4. இசையமைப்பில் குரொமாட்டிக் ஸ்கேலின் பயன் என்ன?
பியானோவில் குரொமாட்டிக் ஸ்கேலில் அதீத ஞானம் பெற்ற இசையமைப்பாளரால் இவற்றை மாற்றி மாற்றி வாசித்து எளிதில் பாடலை இசையமைக்க முடியும்.
5. பிற ஸ்கேல்களில் இல்லாத குரொமாட்டிக் ஸ்கேலின் சிறப்பம்சம் என்ன?
இது இசைக்குறிப்பின் மிகச்சிறிய இடைவெளியான செமிடோன்களாக (ஹாஃப் ஸ்டெப்) ஸ்வரங்களைப் பிரிக்கிறது. எனவே இவற்றை மாற்றியமைத்து பாடலை உருவாக்குவது எளிது.

