
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. ஆசியாவிலேயே மிக அகலமான, அவுன்டா - சிமாரியா ஆறு வழி கேபிள் பாலம் (1.86 கி.மீ. நீளம்; 112 அடி அகலம்), இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அ. குஜராத்
ஆ. உத்தரப்பிரதேசம்
இ. பீகார்
ஈ. சிக்கிம்
2. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், 1ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையில், 5.26 லட்சம் பேருடன், எந்தப் பள்ளிகள் முன்னிலையில் உள்ளன?
அ. அரசுப் பள்ளிகள்
ஆ. தனியார் பள்ளிகள்
இ. மத்திய அரசுப் பள்ளிகள்
ஈ. உறைவிடப் பள்ளிகள்
3. இரண்டாம் உலகப் போரில் வென்றதைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 3ஆம் தேதியை வெற்றி தினமாக, எந்த நாடு கொண்டாடி வருகிறது?
அ. ஜப்பான்
ஆ. ரஷ்யா
இ. அமெரிக்கா
ஈ. சீனா
4. மத்திய அரசின் ஆய்வு முடிவின்படி, கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில், நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கும் மாநிலங்களில், 15 சதவீத பங்களிப்புடன், எது முதலிடம் பிடித்துள்ளது?
அ. தமிழகம்
ஆ. கர்நாடகம்
இ. கேரளம்
ஈ. மகாராஷ்டிரம்
5. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல், எந்தத் படிப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, ஜப்பான், ஜெர்மனி, கொரியா ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றை மாணவர்கள் தேர்வு செய்து கற்க, அண்ணா பல்கலை உத்தரவிட்டுள்ளது?
அ. கலை, அறிவியல்
ஆ. பொறியியல்
இ. பாலிடெக்னிக்
ஈ. மருத்துவம்
6. கஜகஸ்தானில் நடந்த, ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 25 மீ. 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவில், தங்கம் வென்ற இந்திய வீரர்?
அ. அர்ஜுன் பபுடா
ஆ. அனிஷ் பன்வாலா
இ. குர்பிரீத் சிங்
ஈ. ஜிது ராய்
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. அ, 5. ஆ, 6. இ.