
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. நான் முதல்வன் திட்டத்தில், தொழில்துறை சார்ந்த பயிற்சி பெற்ற இளைஞர்களின் விவரங்களை அறிய, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள டிஜிட்டல் வலைத்தளத்தின் பெயர்?
அ. தமிழ்நாடு திறமை பதிவேடு
ஆ. தமிழ்நாடு திறன் மேம்பாடு
இ. தமிழ்நாடு திறன் பதிவேடு
ஈ. தமிழ்நாடு திறன் அறிவோம்
2. கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களும் எளிதாகக் கற்கும் வகையில், சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில், எந்தப் பாடத்தைக் கற்க, புதிய கருவிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன?
அ. ஆங்கிலம்
ஆ. கணிதம்
இ. கணினி
ஈ. அறிவியல்
3. ஏ.பி.சி. (ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்) எனப்படும், பத்திரிகை வினியோகத் தணிக்கை அமைப்பின், 2025 - 26ஆம் ஆண்டுக்கான தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?
அ. கருணேஷ் பஜாஜ்
ஆ. விஜய் சாகர்
இ. பிரபு திலக்
ஈ. மோகனகுமார்
4. இந்தியாவில் உள்ள எந்த மாநகராட்சியில், ஐந்து புதிய மாநகராட்சிகளுடன், 'கிரேட்டர்'ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது?
அ. மைசூரு
ஆ. சென்னை
இ. மும்பை
ஈ. பெங்களூரூ
5. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியில் இருந்து, தன் மகளும், எம்.எல்.சி.யுமான கவிதாவை சஸ்பெண்ட் செய்துள்ள, அந்தக் கட்சியின் தலைவர் யார்?
அ. சந்திரபாபு நாயுடு
ஆ. ஜெகன்மோகன் ரெட்டி
இ. சந்திரசேகர ராவ்
ஈ. எடியூரப்பா
6. எமிரேட்சில் நடந்த குளோபல் செஸ் தொடரில், சூப்பர் ஸ்டார்ஸ் பிரிவில், ஒன்பது சுற்றில் ஒன்றில் கூட தோற்காமல், 7.0 (5 வெற்றி, 4 டிரா) புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்?
அ. விகாஷ்
ஆ. பிரணவ்
இ. அபிஷேக்
ஈ. சந்தோஷ்
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. அ, 4. ஈ, 5. இ, 6. ஆ.