
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், இனி வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்களும் இடம்பெறவுள்ளன. இந்தப் புதிய நடைமுறை, எந்த மாநில சட்டசபை தேர்தல் முதல் அமலுக்கு வருவதாக, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது?
அ. தமிழகம்
ஆ. குஜராத்
இ. பீகார்
ஈ. தெலங்கானா
2. அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில், குடியரசு மற்றும் சுதந்திர தினத்தன்று, யார் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது?
அ. அமைச்சர்கள்
ஆ. தலைமை ஆசிரியர், முதல்வர்
இ. கெளன்சிலர்
ஈ. எம்.எல்.ஏ.க்கள்
3. உலகிலேயே முதன்முறையாக, இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள, பன்னரகட்டா பூங்காவைச் சேர்ந்த, 10 வயது ஆண் கரடியின் பின்னங்காலில், செயற்கை மூட்டு பொருத்தி, சாதனைப் படைக்கப்பட்டு உள்ளது?
அ. ஆந்திரப்பிரதேசம்
ஆ. மகாராஷ்டிரம்
இ. கேரளம்
ஈ. கர்நாடகம்
4. கடந்த ஜூன் காலாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் மியூச்சுவல் பண்டுகளில் அதிகம் முதலீடு செய்த, 'டாப் 110' நகரங்களின் பட்டியலில், எந்த நகரம் முதலிடத்தில் உள்ளதாக, 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது?
அ. சென்னை
ஆ. மும்பை
இ. பெங்களூரூ
ஈ. ஆமதாபாத்
5. உலகிலேயே முதன்முறையாக, மூங்கில் மூலம் இரண்டாம் தலைமுறை பயோ எத்தனால் தயாரிக்கும் ஆலையை, பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார். இது, எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அ. ஜார்க்கண்ட்
ஆ. சட்டீஸ்கர்
இ. உத்தரப்பிரதேசம்
ஈ. அசாம்
6. 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில், தொடர்ந்து இருமுறை கோப்பையை வென்ற முதல் வீராங்கனை எனச் சாதனைப் படைத்துள்ளவர்?
அ. பிரியா
ஆ. திவ்யா
இ. வைஷாலி
ஈ. ஸ்வேதா
விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. ஆ, 5. ஈ, 6. இ.