
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியப் பாதுகாப்பில் நீண்ட காலம் சேவையாற்றிய, எந்த ரக போர் விமானங்கள், சமீபத்தில் விமானப்படையில் இருந்து விடைபெற்றன?
அ. எம்ஐஜி - 21
ஆ. டார்னியர் - 228
இ. எச்ஏஎல் டேஜஸ்
ஈ. கமோவ் கேஏ - 31
2. இந்திய ரயில்வேயில், நாட்டிலேயே பயணியர் கட்டணம் வாயிலாக வருமானம் ஈட்டுவதில் (கடந்த ஏப்ரல் - ஆகஸ்ட் வரை, ரூ.3,273 கோடி), எந்த ரயில்வே முதலிடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளது?
அ. வடக்கு
ஆ. மேற்கு
இ. கிழக்கு
ஈ. தெற்கு
3. பெண்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், தயார் நிலை தொழிற்கூட வசதியுடன் கூடிய முதலாவது, 'டெக்ஸ் பார்க்'கை எந்த மாவட்டத்தில், 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் முதலில் அமைக்க உள்ளது?
அ. மதுரை
ஆ. திருவாரூர்
இ. சேலம்
ஈ. திருப்பூர்
4. அமெரிக்காவுக்கான, 'எச்1பி' விசா கட்டணத்தை, 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தும் நிர்வாக உத்தரவில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் கையெழுத்திட்டார். இது இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய்?
அ. ரூ.1 கோடி
ஆ. ரூ.55 லட்சம்
இ. ரூ.88 லட்சம்
ஈ. ரூ.1.5 கோடி
5. 'இந்திய சினிமாவின் தந்தை' என போற்றப்படும், மறைந்த இயக்குநர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே பெயரில், மத்திய அரசு சார்பில் வழங்கப்படும், சினிமா துறையின் உயரிய விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருது - 2023, சமீபத்தில் எந்த நடிகருக்கு வழங்கப்பட்டது?
அ. மம்மூட்டி
ஆ. கமல்ஹாசன்
இ. ஷாருக்கான்
ஈ. மோகன்லால்
6. தென்கொரியாவில் நடந்த, 'பாரா கிளைம்பிங்' உலக சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் மணிகண்டன் குமார் வென்ற பதக்கம்?
அ. தங்கம்
ஆ. வெள்ளி
இ. வெண்கலம்
ஈ. பிளாட்டினம்
விடைகள்: 1. அ, 2. ஈ, 3. ஆ, 4. இ, 5. ஈ, 6. ஆ.