நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்பயிற்சி மையங்களைத் (ஐ.டி.ஐ.) தரம் உயர்த்தி, தொழில்துறைக்குத் தேவையான ஆட்களை வழங்க, ரூ.60,000 கோடியிலான எந்தத் திட்டத்தை, பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்?
அ. பி.எம். சுதேசி
ஆ. பி.எம். சேது
இ. பி.எம். சுவராஜ்
ஈ. பி.எம். ஸ்வச்
2. ஜப்பானின் முதல் பெண் பிரதமராகத் தேர்வாகி உள்ள, 64 வயதான சனே டக்காய்ஷி, எந்த இசைக்கருவியை வாசிக்கும் பிரபல இசைக் கலைஞராவார்?
அ. டிரம்ஸ்
ஆ. வயலின்
இ. கிட்டார்
ஈ. பியானோ
3. சுயசார்பு இந்தியாவை உருவாக்கும் வகையில், 'சுதேசி' பாடப் புத்தகத்தை வடிவமைத்துள்ள, 'இந்திய தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கெளன்சிலின்' சுருக்கக் குறியீடு என்ன?
அ. என்.எப்.ஐ.டி.சி.
ஆ. என்.சி.ஆர்.டி.
இ. என்.சி.இ.ஆர்.டி.
ஈ. எப்.சி.ஆர்.ஐ.டி.
4. நார்வே நாட்டில் உள்ள, போர்டே நகரில் நடந்த உலகப் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான பிரிவுகளில் மொத்தம் 199 கிலோவைத் தூக்கி, வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
அ. பிந்தியாராணி தேவி
ஆ. மீராபாய் சானு
இ. சஞ்சிதா சானு
ஈ. அனு பதானி
5. மகளிருக்கான இலவச பஸ் பயண திட்டத்தால், ஆட்டோ, டாக்சி, வேன் டிரைவர்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்த நிலையில், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, எந்த மாநில அரசு தொடங்கியுள்ளது?
அ. ஆந்திரம்
ஆ. தமிழ்நாடு
இ. தெலங்கானா
ஈ. கேரளம்
6. அரசு நிதியுதவி தடைப்பட்டதால், எந்த நாட்டின் விண்வெளி நிறுவனம், தன் வலைத்தள பக்கம் தற்போது மூடப்பட்டுள்ளதாக, அறிவிப்பை வெளியிட்டுள்ளது?
அ. ஜாக்ஸா, ஜப்பான்
ஆ. இ.எஸ்.ஏ., ஐரோப்பா
இ. நாசா, அமெரிக்கா
ஈ. சி.என்.எஸ்.ஏ., சீனா
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. ஆ, 5. அ, 6. இ.