நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. அதிநவீன தகவல் தொழில்நுட்ப சேவைக்கான அதிக எடையுள்ள எந்தச் செயற்கைக்கோளை, இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனைப் படைத்துள்ளனர்?
அ. சி.எம்.எஸ். - 03
ஆ. எப்.எச்.ஐ. - 05
இ. ஐ.சி.எஸ். - 08
ஈ. எச்.பி.ஐ. - 10
2. கிழக்கு ஆப்பிரிக்க நாடான எங்கு நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபரான சமியா சுலுஹு ஹசன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்?
அ. கென்யா
ஆ. உகாண்டா
இ. தான்சானியா
ஈ. எத்தியோபியா
3. சர்வதேச அளவில் அதிக ஏலக்காய் உற்பத்தி செய்யும் நாடு என்ற பெருமையை, 1981 - 82க்குப் பின் எந்த நாடு பெற்றுள்ளது?
அ. ஸ்பெயின்
ஆ. இந்தியா
இ. இந்தோனேசியா
ஈ. நேபாளம்
4. பிரிட்டனைச் சேர்ந்த, 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள, ஆசிய அளவில் சிறந்த பல்கலைகளின் பட்டியலில், தமிழகத்தின் அண்ணா பல்கலை, 177வது இடத்தில் இருந்து, எந்த இடத்திற்குப் பின்தங்கி உள்ளது?
அ. 250
ஆ. 225
இ. 204
ஈ. 210
5. ஆங்கில புலமை இல்லாததால், 7,000 லாரி டிரைவர்களை நீக்கி, எந்த நாட்டு போக்குவரத்துத்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது?
அ. ரஷ்யா
ஆ. பிரிட்டன்
இ. நியூசிலாந்து
ஈ. அமெரிக்கா
6. டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், ஒற்றையர் பிரிவில், 11,500 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இத்தாலி வீரர்?
அ. மேட்டியோ பெரெட்டினி
ஆ. ஜானிக் சின்னர்
இ. லோரென்சோ
முசெட்டி
ஈ. ஃபேபியோ ஃபோக்னினி
விடைகள்: 1. அ, 2. இ, 3. ஆ, 4. இ, 5. ஈ, 6. ஆ.

