
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. கடந்த அக்டோபரில், மத்திய அரசு அலுவலகங்களில் சேகரித்த பழைய பொருட்கள் விற்பனை மூலமாக, எவ்வளவு கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது?
அ. ரூ.600 கோடி
ஆ. ரூ.550 கோடி
இ. ரூ.800 கோடி
ஈ. ரூ.750 கோடி
2. இந்தியாவின் எந்த மாநிலம், பருவநிலை மாறுபாடு காரணமாக மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித் திட்ட அமைப்பு எச்சரித்துள்ளது?
அ. சிக்கிம்
ஆ. ஜம்மு - காஷ்மீர்
இ. ஹரியாணா
ஈ. ஹிமாச்சலப்பிரதேசம்
3. நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக, மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய தண்ணீர் விருதுக்கு முதல் மாநிலமாகத் தேர்வாகியுள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரம்
இ. கேரளம்
ஈ. கர்நாடகம்
4. உலக நாடுகள், கடந்த 2024ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில், பாதிக்கும் மேற்பட்டவை எந்த நாடு தாக்கல் செய்ததாக, உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது?
அ. சீனா
ஆ. அமெரிக்கா
இ. ரஷ்யா
ஈ. பிரிட்டன்
5. இந்தியாவின் எந்த அண்டை நாட்டில், பிரதமர் மற்றும் அதிபரின் முக்கிய அதிகாரங்கள், ராணுவ தளபதி அசிம் முனீருக்கு வழங்கப்பட்டுள்ளது?
அ. ஆப்கானிஸ்தான்
ஆ. நேபாளம்
இ. வங்கதேசம்
ஈ. பாகிஸ்தான்
6. சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடந்த, 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி மொத்தம் எத்தனைப் பதக்கங்களுடன், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது?
அ. 250
ஆ. 850
இ. 790
ஈ. 560
விடைகள்:
1. இ,
2. ஈ,
3. ஆ,
4. அ,
5. ஈ,
6. இ.

