
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. பிரான்ஸ் நாட்டிடம் இருந்து, எத்தனை ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், உக்ரைன் கையெழுத்திட்டு உள்ளது?
அ. 150
ஆ. 100
இ. 180
ஈ. 200
2. மொபைல்போன் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் புகார் அளித்து மீட்கும் வகையில், மத்திய தொலைத்தொடர்பு துறை செயல்படுத்தும் இணையதளம்?
அ. சன்சார் சாத்தி
ஆ. மேக் இன் இந்தியா
இ. சன்சார் நிகாம்
ஈ. மொபைல் த்ரெட்
3. நாடு முழுவதும் ஒரே செயலியில் பதிவு செய்து, ஆட்டோ மற்றும் கால் டாக்சியில் பயணிக்க வசதியாக, மத்திய அரசு விரைவில் செயல்பாட்டிற்குக் கொண்டு வர உள்ள செயலி?
அ. டாக்சி வாலா
ஆ. தேஷ் சவாரி
இ. பாரத் டாக்சி
ஈ. நம்ம யாத்ரி
4. 'யுனிசெப்' எனப்படும், ஐக்கிய நாடுகள் சபையின், குழந்தைகள் நல அமைப்பின் இந்தியா தூதராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?
அ. தீபிகா படுகோன்
ஆ. ஐஸ்வர்யா ராய்
இ. கங்கனா ரனாவத்
ஈ. கீர்த்தி சுரேஷ்
5. போதுமான மக்கள்தொகை இல்லை எனக் கூறி, தமிழகத்தின் எந்த இரு மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு திரும்பி அனுப்பியுள்ளது?
அ. கன்னியாகுமரி, தென்காசி
ஆ. திருச்சி, சேலம்
இ. கோவை, மதுரை
ஈ. காஞ்சிபுரம், செங்கல்பட்டு
6. வங்கதேசத்தில் நடந்த ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்?
அ. திராஜ், அங்கிதா
ஆ. கெளசிக், ஸ்வேதா
இ. சுஷாந்த், ரித்திகா
ஈ. கணேஷ், திவ்யா
விடைகள்:
1. ஆ
2. அ
3. இ
4. ஈ
5. இ
6. அ.

