
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. பிறப்புச் சான்றிதழாகவோ, பிறந்த தேதிக்கான சான்றாகவோ ஆதார் அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படாது என, இந்தியாவின் எந்த இரு மாநில அரசுகள் அறிவித்துள்ளன?
அ. தமிழ்நாடு, தெலங்கானா
ஆ. ஜார்க்கண்ட், மணிப்பூர்
இ. ஒடிசா, பஞ்சாப்
ஈ. மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம்
2. சாலைகள் குறித்து புகார் தெரிவிக்கும் வகையில், தமிழக மாநில நெடுஞ்சாலைத்துறை கடந்தாண்டு உருவாக்கிய, மொபைல்போன் செயலியின் பெயர் என்ன?
அ. வழித்தடம்
ஆ. புகார் பெட்டி
இ. நம்ம சாலை
ஈ. ரோட் சேப்டி
3. உக்ரைனின் முக்கியமான போக்குவரத்து நகரமான, டோனெட்ஸ்க் மாகாணத்தின் எந்த நகரை, தாங்கள் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது?
அ. போக்ரோவ்ஸ்க்
ஆ. கார்கிவ்
இ. வின்னிட்சியா
ஈ. நிகோபோல்
4. உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்தாண்டில் மட்டும் ரூ.60.43 லட்சம் கோடி விற்பனையை எட்டியுள்ளதாக, சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், முதலிடத்தில் உள்ள நாடு எது?
அ. இந்தியா
ஆ. அமெரிக்கா
இ. ரஷ்யா
ஈ. சீனா
5. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், 'ராஜ்பவன்' என்ற பெயரில் இருந்த கவர்னர் மாளிகைகள் இனி, 'லோக்பவன்' என்று பெயர் மாற்றம் அடைந்துள்ளது. அதன்படி, தமிழக கவர்னர் மாளிகை இனி, என்ன பெயரில் அழைக்கப்படும்?
அ. ராஜ மாளிகை
ஆ. லோக்பவன்
இ. கெளரவ மாளிகை
ஈ. மக்கள் மாளிகை
6. கோல்கட்டாவில் நடந்த, சையது முஷ்தாக் அலி டிராபி, 'டி-20' தொடரின் 18வது சீசன் போட்டி லீக் சுற்றில், 58 பந்தில் சதம் விளாசி சாதனைப் படைத்த இந்திய வீரர்?
அ. ஹர்ஷித் ராணா
ஆ. சஞ்சு சாம்சன்
இ. சூர்யவன்ஷி
ஈ. சுப்மன் கில்
விடைகள்: 1. ஈ, 2. இ, 3. அ, 4. ஆ, 5. ஈ, 6. இ.

