
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. தென் அமெரிக்காவின் எந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்க ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து, இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றுள்ளார்?
அ. பொலிவியா
ஆ. அர்ஜென்டினா
இ. வெனிசுலா
ஈ. உருகுவே
2. அரிசி உற்பத்தியில், எந்த நாட்டைப் பின்னுக்குத் தள்ளி, உலகிலேயே மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்?
அ. ரஷ்யா
ஆ. ஸ்பெயின்
இ. பாகிஸ்தான்
ஈ. சீனா
3. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல், நம் கடற்படையில் சமீபத்தில் இணைக்கப்பட்டது. அதன் பெயர் என்ன?
அ. ஷிவாலிக்
ஆ. ஐ.என்.எஸ். சக்தி
இ. சமுத்திர பிரதாப்
ஈ. கல்வாரி
4. பெங்களூரூ - விஜயவாடா இடையே மேற்கொள்ளப்படும், 'என்.எச். 544 ஜி' வழித்தடத்தில், 24 மணி நேரத்தில், எத்தனை கி.மீ. தூரம் சாலை அமைத்ததன் மூலம், தேசிய நெடுஞ்சாலை கட்டுமானத்தில், கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது?
அ. 50
ஆ. 29
இ. 10
ஈ. 78
5. உலகளவில் கடந்தாண்டு, ரூ.82,800 கோடி மதிப்பிலான வெள்ளியை இறக்குமதி செய்து, சர்வதேச அளவில் எந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது?
அ. இந்தியா
ஆ. ஜப்பான்
இ. பிரேசில்
ஈ. செளதி அரேபியா
6. போபாலில் நடந்த தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் 68வது சீசன் போட்டியில், ஜூனியர் பெண்கள் தனி நபர் 10 மீ. 'ஏர் ரைபிள்' பிரிவில், தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை திலோத்தமா சென், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
அ. பஞ்சாப்
ஆ. ஹரியாணா
இ. தமிழ்நாடு
ஈ. கர்நாடகம்
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. இ, 4. ஆ, 5. அ, 6. ஈ.

