
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. இந்தியாவில் இருந்து சீனாவுக்கு, கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஏற்றுமதி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், எவ்வளவு சதவீதம் அதிகரித்து, ரூ.1.10 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது?
அ. 40 சதவீதம்
ஆ. 50 சதவீதம்
இ. 33 சதவீதம்
ஈ. 35 சதவீதம்
2. தமிழகத்தில் முதன்முறையாக எங்கு, சர்வதேச பறவைகள் மையம் அமைப்பதற்கான பணிகளை, வனத்துறை தொடங்கி உள்ளது?
அ. வேடந்தாங்கல்
ஆ. காரைவெட்டி
இ. வடுவூர்
ஈ. மரக்காணம்
3. 'எத்திலீன் கிளைக்கால்' என்ற நச்சுப்பொருள் கண்டறியப்பட்டு உள்ளதால், சளி, காய்ச்சலுக்காக குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரைக்கும், 'அல்மான்ட் கிட்' சிரப்பைப் பயன்படுத்த வேண்டாம்' என, எந்த மாநில மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் எச்சரித்துள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. தெலங்கானா
இ. குஜராத்
ஈ. அசாம்
4. சீனா, வங்கதேச நாடுகளைக் கண்காணிக்க, மேற்குவங்க மாநிலத்தில் உள்ள எந்த நகரின் கடற்கரை அருகே, புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை, இந்தியா தொடங்கியுள்ளது?
அ. கொல்கட்டா
ஆ. சிலிகுரி
இ. துர்காபூர்
ஈ. மால்டா
5. கலாசார மற்றும் மொழியியல் பரிமாற்றங்களை ஆழப்படுத்தும் முயற்சியாக, அரசு பள்ளி, கல்லூரிகளில் முழுநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த, எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?
அ. கர்நாடகம்
ஆ. மத்திய பிரதேசம்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. உத்தர பிரதேசம்
6. கொல்கட்டாவில் நடந்த 'டாடா ஸ்டீல் இந்தியா, ரேபிட் அண்டு பிளிட்ஸ்' ஓபன் செஸ் தொடரில், ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்?
அ. விஸ்வநாத் ஆனந்த்
ஆ. பிரக்யானந்தா
இ. நிஹாஸ் சரின்
ஈ. குகேஷ்
விடைகள்: 1. இ, 2. ஈ, 3. ஆ, 4. அ, 5. ஈ, 6. இ.

