
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் உள்ள விமான நிலையம், சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படுவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையம் கொண்ட முதல் மாநிலமாகத் தமிழகம் உருவாகி உள்ளது?
அ. நெல்லை
ஆ. சேலம்
இ. மதுரை
ஈ. தூத்துக்குடி
2. உலகளாவிய ஆயுத இறக்குமதியில் உக்ரைன் நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், 8.3 சதவீத ஆயுத இறக்குமதியைச் செய்து, எந்த நாடு இரண்டாம் இடத்தில் உள்ளதாக, ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது?
அ. இந்தியா
ஆ. ரஷ்யா
இ. பிரான்ஸ்
ஈ. இஸ்ரேல்
3. நேபாள அரசியலில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய பாரம்பரிய கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்று, நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்க உள்ள 35 வயதான பாலேந்திர ஷா, இதற்கு முன் எந்தத் துறையில் புகழ்பெற்றவர்?
அ. கதாசிரியர்
ஆ. பாடலாசிரியர்
இ. இசையமைப்பாளர்
ஈ. 'ராப்' பாடகர்
4. இந்தியாவின் எந்த இரு மாநிலத்தில், 13 மற்றும் 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
அ. குஜராத், அசாம்
ஆ. ஆந்திரம், கர்நாடகம்
இ. உத்தரப்பிரதேசம், பீகார்
ஈ. மேற்குவங்கம், தமிழகம்
5. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த, ஐ.சி.சி. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், எந்த அணியை வீழ்த்தி, இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தது?
அ. ஆஸ்திரேலியா
ஆ. தென் ஆப்பிரிக்கா
இ. நியூசிலாந்து
ஈ. இங்கிலாந்து
விடைகள்: 1. இ, 2. அ, 3. ஈ, 4. ஆ, 5. இ.

