நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. பேகம்பட் விமான நிலைய ஓடுதளத்தின் அடியில், உலகின் முதல் நிலத்தடி போக்குவரத்து சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையம், இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
அ. பெங்களூரூ, கர்நாடகம்
ஆ. சென்னை, தமிழ்நாடு
இ. ஐதராபாத், தெலங்கானா
ஈ. மும்பை, மகாராஷ்டிரம்
2. சென்னை ஐ.ஐ.டி.யில், எந்த இரு முதுநிலை பட்டப்படிப்புகளில், நான்கு புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன?
அ. எம்.ஏ. - எம்.டெக்.
ஆ. எம்.எஸ்.சி. - எம்.காம்.
இ. எம்.எட். - எம்.சி.ஏ.
ஈ. எம்.பி.ஏ. - எம்.எஸ்.டபிள்யூ.
3. இந்தியாவில், நிலத்தடியில் குழாய்கள் பதித்து, அதன் வழியாக நம் வீட்டின் சமையல் அறைக்கே நேரடியாக கொண்டுவரப்படும் எரிவாயுவின் பெயர் என்ன?
அ. எல்.பி.ஜி.
ஆ. பி.என்.ஜி.
இ. சி.என்.ஜி.
ஈ. ஐ.பி.ஜி.
4. வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது?
அ. 169
ஆ. 170
இ. 125
ஈ. 156
5. ஜெர்மனியில் நடந்த, 'டி.டி.பி. போகல் 2026' ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், ஒட்டுமொத்தமாக 13.666 புள்ளிகள் எடுத்து, தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர்?
அ. சுரேந்தர்
ஆ. ராணா
இ. ரோஹித்
ஈ. ஹர்ஸ்சித்
விடைகள்: 1. இ, 2. அ, 3. ஆ, 4. அ, 5. ஈ.

