PUBLISHED ON : ஜூன் 01, 2026

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. நிலவில் மனிதர்களைக் குடியேற்றும் ஆய்வுக்கு, அங்கு ரோவர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் கூடிய நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை, எந்த விண்வெளி மையம் அறிவித்துள்ளது?
அ. இஸ்ரோஆ. ஈசா
இ. நாசா
ஈ. சிஎஸ்ஏ
2. அரசு நிர்வாகத்தில் அனைத்து மட்டத்திலும் ஊழலை ஒழிக்க, 'புராஜெக்ட் ஜீரோ' என்ற ஒருங்கிணைந்த ஊழல் ஒழிப்புத் திட்டத்தை, எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது?
அ. சிக்கிம்
ஆ. கேரளம்
இ. கர்நாடகம்
ஈ. மஹாராஷ்டிரம்
3. இந்தியாவின் எந்த மாநிலத்தில், அனைத்து அரசு பஸ்களிலும், ஜூன் 1 முதல், பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது?
அ. மேற்குவங்கம்
ஆ. தமிழ்நாடு
இ. புதுச்சேரி
ஈ. அசாம்
4. மெக்சிகோ நாட்டின் குவாடலஜாராவில் உள்ள, ஜாலிஸ்கோ மைதானத்தின் வெளியே, மறைந்த பிரேசில் கால்பந்து வீரரான யாருக்கு, 31 அடி உயர சிலை திறக்கப்பட்டுள்ளது?
அ. மரடோனா
ஆ. பெக்கன்பாவர்
இ.பீலே
ஈ. ஜோஹன் க்ரூஃப்
5. ஜார்க்கண்டில் நடந்த, பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் 29வது சீசனில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில், பந்தய தூரத்தை அதிவேகமாக, 10.09 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்று, தேசிய சாதனை படைத்துள்ளவர்?
அ. அனிமேஷ் குஜூர்
ஆ. குரிந்தர்வீர் சிங்
இ. அவினாஷ் சேபிள்
ஈ. விஷால்
விடை: 1.இ, 2.ஆ, 3.அ, 4.இ, 5.ஆ
