தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : ஜூன் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 29, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. இந்தியாவின் எந்த மாநிலத்தில், சூரிய சக்தி வாயிலாகப் பெறப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி, 3,000 குடும்பத்தினர் கடந்த மாதம் பூஜ்ஜிய மின்சார கட்டணத்தைப் பெற்றுள்ளனர்?

அ. குஜராத்

ஆ. உத்தரப்பிரதேசம்

இ. ஒடிசா

ஈ. பீகார்

2. அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின், 'பி.எம். ஸ்ரீ' திட்டத்தின் நிதி பயன்பாட்டில், இந்தியாவிலேயே எந்த மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது?

அ. தமிழகம்

ஆ. ஆந்திரம்

இ. கேரளம்

ஈ. சிக்கிம்

3. அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் முழு விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு, பாகிஸ்தான், கத்தார் நாடுகளில், எங்கள் நாட்டைப் போன்ற பத்திரிகை சுதந்திரம் இல்லாததே காரணம் என, எந்த நாட்டின் துணை அதிபரான ஜே.டி.வான்ஸ் கூறினார்?

அ. உக்ரைன்

ஆ. இஸ்ரேல்

இ. ஈரான்

ஈ. அமெரிக்கா

4. மேற்குவங்க மாநிலம் கொல்கட்டாவில் நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எத்தனை அதிநவீன போர்க் கப்பல்களை, பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்?

அ. இரண்டு

ஆ. மூன்று

இ. நான்கு

ஈ. ஐந்து



5. உலகக் கோப்பை கால்பந்து தொடர் 23வது சீசன் லீக் போட்டியில், கத்தார் அணியை வீழ்த்தியதன் மூலம், எந்த அணி உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது?


அ. கனடா

ஆ. ரஷ்யா

இ. ஆஸ்திரேலியா

ஈ. தென்ஆப்பிரிக்கா

விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஈ, 4. ஆ, 5. அ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us