sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நூற்றுக்கு நூறு: கடிகாரமும் மணியோசையும்

/

நூற்றுக்கு நூறு: கடிகாரமும் மணியோசையும்

நூற்றுக்கு நூறு: கடிகாரமும் மணியோசையும்

நூற்றுக்கு நூறு: கடிகாரமும் மணியோசையும்


PUBLISHED ON : செப் 29, 2025

Google News

PUBLISHED ON : செப் 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு கடிகாரம், 6 மணிக்கு 6 முறை மணி அடிப்பதற்கு 30 வினாடிகளை எடுத்துக் கொள்கிறது. அதே கடிகாரம், 12 மணிக்கு 12 முறை மணி அடிப்பதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும்?

விடைகள்: 66 வினாடிகள்

விளக்கம்: இந்தப் புதிரில் நீங்கள் மணி அடிக்கும் எண்ணிக்கையை நேரத்துடன் நேரடியாகத் தொடர்புப்படுத்தக் கூடாது. மாறாக, மணி அடிக்கும் சத்தங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

6 மணிக்கு, கடிகாரம் 6 முறை மணி அடிக்கிறது. ஆனால், 6 சத்தங்களுக்கு இடையில் 5 இடைவெளிகள் மட்டுமே உள்ளன.

இந்த 5 இடைவெளிகள் கடந்து செல்ல 30 வினாடிகள் ஆகிறது.

எனவே, ஒவ்வொரு இடைவெளிக்கும் 30/5 = 6 வினாடிகள் ஆகும்.

இப்போது, 12 மணிக்கு, கடிகாரம் 12 முறை மணி அடிக்கும்போது, 12 சத்தங்களுக்கு இடையில் 11 இடைவெளிகள் இருக்கும் அல்லவா!

அப்படியானால், ஒவ்வோர் இடைவெளிக்கும் 6 வினாடிகள் என, மொத்தம் 11×6 = 66 வினாடிகள் ஆகும்.

ஆக, 12 முறை மணி அடிப்பதற்கு அந்த கடிகாரம் எடுத்துக்கொள்ளும் நேரம் 66 வினாடிகள்.






      Dinamalar
      Follow us