PUBLISHED ON : அக் 13, 2025
ராகுல் தனது வீட்டிலிருந்து நண்பன் கோகுல் வீட்டிற்குச் செல்ல பைக்கில் புறப்படுகிறார்.
5 கி.மீ. தூரம் சென்ற பிறகு, பைக்கின் பின்புறம் வைத்திருந்தத் தனது பையைப் பார்க்கிறார். அது காணவில்லை.
கோகுலுக்கு வழங்குவதற்காகத் தனது பையில் ஒரு பரிசை வைத்திருந்தார்.
பைக்கில் திரும்பி வந்து, 10 நிமிடங்கள் கழித்து அதைக் கண்டுபிடித்தார்.
எடுத்துக்கொண்டு 10 கி.மீ. பைக்கில் சென்ற போது, கோகுல் வீடு வந்தது.
அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதிய நேரத்தில் உணவு உண்டு களித்தனர்.
கொண்டுவந்த பரிசை கோகுலுக்கு வழங்கிவிட்டு, ராகுல் தன் வீட்டிற்குத் திரும்பினார்.
கேள்வி: ராகுல் பயணம் செய்த மொத்த கி.மீ. எவ்வளவு?
விடை: 30 கி.மீ.
விளக்கம்: இரண்டு வீடுகளுக்கும் இடையே உள்ள தூரம் நமக்குத் தெரியாது.
பையைக் கண்டுபிடிக்க ராகுல் சென்ற தொலைவை x என்று கருதலாம்.
அப்படியென்றால், மேலே உள்ள படத்தில் காட்டியபடி, ராகுல் கோகுல் வீட்டிற்குச் சென்ற தூரம் = 5+x+10 கி.மீ.
அவர் தனது வீட்டிற்குத் திரும்பும்போது எடுத்துக்கொண்ட தூரம்
= 10-x+5 கி.மீ.
ஆக, ராகுல் பயணம் செய்த மொத்த தூரம்
= 5+x+10+10-x+5
= 5+10+10+5
= 30 கி.மீ.