PUBLISHED ON : ஆக 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரகுவும் மணியும் நண்பர்கள். போட்டித் தேர்வுக்காக இருவரும் படித்துக் கொண்டிருந்தனர்.
ரகு மணியிடம் 'டைம் என்ன இப்போ?' என்று கேட்டான்.
அதற்கு மணி '5' என்று சொன்னான்.
'சரி, நான் உன்கிட்ட இப்போ ஒரு கேள்வி கேக்குறேன், பதில் சொல்றியா?' என்று ரகு கேட்டதற்கு, 'சரி கேளு' என்று மணி சொன்னான்.
நான் 11 உடன் 6ஐக் கூட்றேன். எனக்கு விடை 5 வருது. எப்படி?
மணிக்குப் பதில் தெரியவில்லை. உங்களுக்கு?
விடைகள்: கடிகாரத்தில், 11 மணி உடன் 6ஐக் கூட்டினால் 'மணி 5' வரும்.