PUBLISHED ON : ஜன 12, 2026

தன் எட்டு வயது மகனுடன் ரகு சுற்றுலா செல்லத் திட்டமிட்டார்.
ரயில் டிக்கெட்களை இணையம் வாயிலாக முன்பதிவு செய்ய முனைந்தார்.
மகனுக்கு, அரை டிக்கெட். அதாவது விலையில் பாதி. ஆனால், முன்பதிவுக்கான கட்டணம் மட்டும் இருவருக்கும் சமம்.
* முன்பதிவுக் கட்டணத்தோடு சேர்த்து ரகுவின் டிக்கெட் கட்டணம் மட்டும் ரூ.525 என வந்தது.
* இருவருக்குமான முன்பதிவுக் கட்டணத்தோடு சேர்த்து, டிக்கெட்டின் மொத்த கட்டணம் ரூ.850 என வந்தது.
கேள்வி: முன்பதிவு கட்டணம் எவ்வளவு?
விடை: ரூ.125
தீர்வு:
முழு டிக்கெட்டின் விலையை x எனவும், முன்பதிவு கட்டணத்தை y எனவும் கருதிக்கொள்க. அரை டிக்கெட்டின் விலை x/2 ஆகும். இருவருக்கும் முன்பதிவு கட்டணமான 'y' சமம்.
எனவே, ரகுவின் டிக்கெட் (முழு டிக்கெட் + முன்பதிவு கட்டணம்)
⇒ x + y = 525
⇒ x = 525 - y ...(i)
இருவருக்குமான மொத்த கட்டணம் (ரகுவின் டிக்கெட் + மகனின் அரை டிக்கெட் + 2 முன்பதிவு கட்டணங்கள்)
⇒ x + x/2 + 2y = 850 ...(ii)
சமன்பாடு (ii)-ஐ எளிமைப்படுத்தினால் கிடைப்பது:
3x/2 + 2y = 850
⇒ (3x + 4y)/2 = 850
⇒ (3x + 4y) = 850 X 2
⇒ 3x + 4y = 1700 ...(iii)
சமன்பாடு (i)ஐ (iii)இல் பிரதியிட்டால் கிடைப்பது:
3(525 - y) + 4y = 1700
⇒ 1575 - 3y + 4y = 1700
⇒ y = 1700 - 1575
⇒ y = 125.
எனவே, முன்பதிவுக்கான கட்டணம் மட்டும் 125 ரூபாயாகும்.

