PUBLISHED ON : மே 11, 2026
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழே சொன்னபடி செய்தால், கணக்கில் உள்ள ஒரு தந்திரத்தை நீங்கள் அறியலாம்!
* 1 முதல் 9 வரையில் ஏதேனும் ஓர் எண்ணை நினைத்துக் கொள்ளுங்கள்.
(உதாரணமாக, 2ஐ நினைத்துக் கொள்வோம்.)
* அந்த எண்ணுடன் 10ஐக் கூட்டுங்கள்.
(2+10 = 12)
* நீங்கள் நினைத்த எண் என்ன?
அதையும் சேர்த்துக் கூட்டிக் கொள்ளுங்கள்.
(12+2 = 14)
* 2ஆல் வகுக்கவும்.
(14/2 = 7)
* வகுத்துக் கிடைத்த எண்ணை,
நினைத்த எண்ணில் கழிக்கவும்.
(7-2=5)
விடை 5 வருகிறது அல்லவா!
1 முதல் 9 வரையில், நீங்கள் எந்த எண்ணை எடுத்து இப்படிச் செய்தாலும், விடை '5' தான் வரும்.
சந்தேகம் இருந்தால் சரிபாருங்கள்!

