PUBLISHED ON : டிச 22, 2025

* இன்று இவருக்குப் பிறந்த நாள்.
* 1887ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஈரோட்டில் மாவட்டத்தில் பிறந்தார்.
* சிறு வயதிலேயே கணிதத்தில் அபாரத் திறமையுடன் விளங்கியவர். கும்பகோணத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயின்றவர்.
* யாருடைய உதவியும் இல்லாமல், தானே முயன்று கணிதத்தின் மிக அடிப்படையான ஆழமான உண்மைகளைக் கண்டறிந்தவர்.
* 1914 மற்றும் 1918 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே இவர் மூவாயிரத்திற்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தவர்.
* தன் கணிதக் கண்டுபிடிப்புகளைப் பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பிரபல கணிதவியலாளர் ஜி.ஹெச்.ஹார்டிக்கு (G.H.Hardy) கடிதங்கள் மூலம் தெரிவித்தவர். அவரும் இவரது திறமையை உணர்ந்து இங்கிலாந்துக்கு அழைப்பு விடுத்தார்.
* 1914ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
* இங்கிலாந்து இவரது திறமையைக் கண்டு வியந்து, 1919ஆம் ஆண்டு, இவரை மதிப்புமிக்க ராயல் சொசைட்டி உறுப்பினராக (Fellow of the Royal Society) தேர்ந்தெடுத்துப் பெருமைப்படுத்தியது. இந்த நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்!
* எண் கோட்பாடு (Number Theory), முடிவிலித் தொடர்கள் (Infinite Series), மாக் தீட்டா சார்புகள் (Mock Theta Functions) போன்ற கணிதப் பிரிவுகளில் இவரது பங்களிப்புகள் உலகளவில் முக்கியமானவை.
* இவரது பிறந்த நாளான டிசம்பர் 22ஐ, இந்திய அரசு தேசிய கணித தினமாக (National Mathematics Day) 2012ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறது.
* 32வது வயதிலேயே (ஏப்ரல் 26, 1920) உடல்நலக் குறைவால் காலமான இந்தக் கணித மேதை யார் தெரியுமா?
விடை: ஸ்ரீனிவாச ராமானுஜன்

