sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/விடுமுறை விளையாட்டு

விடுமுறை விளையாட்டு

விடுமுறை விளையாட்டு


PUBLISHED ON : மே 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 25, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் காட்டியுள்ள மாதிரி ஒரு ஜேகே போர்டில் வரைந்து வைத்துக்கொள்ளுங்கள். இரு ஆட்டக்காரர்களும் வெவ்வேறு வண்ணங்களில் எழுதும் பேனா எடுத்துக்கொள்ளுங்கள். இது இரண்டு பகடைகள் கொண்டு ஆடும் ஆட்டம்.

ஒருவர் இரு பகடைகளையும் வீச வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, ஒரு பகடையில் 4, மற்றதில் 2 விழுந்திருப்பதாக வைத்துக்கொள்வோம். 2ம் 4ம் சந்திக்கும் கட்டங்கள் இரண்டு இருக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றில் தன் பேனாவால் ஓர் அடையாளக் குறியை இடவேண்டும். அடையாளக் குறி என்பது வட்டம், நட்சத்திரம், முக்கோணம், டிக் மார்க், இன்டு மார்க் என ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். ஓர் ஆட்டக்காரருக்கு ஒரே அடையாளக் குறிதான்.

அடுத்த ஆட்டக்காரர் பகடை வீசவும். அவருக்கு 3, 6 என எண்கள் விழுவதாகக் கொள்வோம். அந்த இரு எண்களும் சந்திக்கும் ஏதேனும் ஒரு கட்டத்தில் தன் பேனாவால் தனக்குரிய அடையாளத்தை இட வேண்டும்.

இப்படியே விளையாடி வருகையில் அடுத்தடுத்த கட்டங்களில் வரிசையாக ஒரே குறி வந்துவிட்டால், அவை மூன்றையும் ஆட்டக்காரர் இணைத்து ஒரு கோடு வரைந்துகொள்ள வேண்டும். அவை ஒரு செட் என்று கணக்கு.

ஆட்டத்தின் முடிவில் யார் அதிக எண்ணிக்கையில் செட் எடுத்திருக்கிறாரோ அவரே வெற்றியாளர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us