
1. நான் ஒரு நதி!
நான் வங்கதேசத்தில் 'பத்மா' என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.
நான் பிரம்மபுத்திரா நதியோடு கலக்கும் போது 'ஜமுனா' என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.
நான் உருவாகும் போது 'பாகீரதி' என்ற பெயரால் அழைக்கப்படுகிறேன்.
2. நான் ஒரு தீவு!
எனக்கு 1973ஆம் ஆண்டு தான் தற்போதுள்ள பெயர் சூட்டப்பட்டது.
என்னை மாலத்தீவுகளிலிருந்து 8டிகிரி கால்வாய் பிரிக்கிறது.
மனிதர்களே வசிக்காத 'பீட்' எனும் பறவைகள் சரணாலயம் இங்கு அமைந்துள்ளது.
3.நான் ஒரு இந்திய மாநிலம்!
சிந்து சமவெளி காலத்தில் 'துறைமுக நகரமான லோத்தல்' இந்த மாநிலத்தில் அமைந்துள்ளது.
யுனெஸ்கோவால் அங்கிகரிக்கட்ட உயிர்க்கோளக் காப்பகமான 'ரான் ஆஃப் கட்ச்' இங்கே அமைந்துள்ளது.
இந்தியாவின் நீளமான கடற்கரையைக் கொண்டுள்ளது.
4.நான் ஒரு தோட்டப் பயிர்!
நான் அயனமண்டல மற்றும் உபஅயன மண்டலக் காலநிலைகளில் சிறப்பாக வளர்வேன்.
என்னை உற்பத்தி செய்வதில் 'அஸ்ஸாம்' மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
பூகி, அஸ்ஸாமிகா போன்ற பல வகைகளில் நான் காணப்படுவேன்.
விடைகள்:
1.கங்கை நதி
2.லட்சத் தீவுகள்
3.குஜராத்
4.தேயிலை

