PUBLISHED ON : செப் 29, 2025

சிம் கார்டு (SIM Card) என்பது மொபைல் போன்கள், பிற தொலைத்தொடர்பு சாதனங்களில் பயன்படும் ஒரு சிறிய மின்னணு அட்டை. Subscriber Identity Module என்பதன் சுருக்கக்குறியீடே SIM எனப்படுகிறது. ஒவ்வொரு சிம் கார்டும் ஒரு தனிப்பட்ட IMSI (International Mobile Subscriber Identity) எண்ணைக் கொண்டிருக்கிறது. இது நெட்வொர்க்கில் பயனரை அடையாளப்படுத்த உதவுகிறது.
சிம் கார்டு மூலமே நாம் மொபைல் அழைப்புகள், குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் இணைய இணைப்பு (Mobile Data) போன்ற சேவைகளைப் பெற முடியும். இவை பல்வேறு அளவுகளில் (Sizes) உள்ளன. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஏற்ப பரிணாமம் (Evolution) அடைந்துள்ளன. கீழே நாம் ஆரம்பத்திலிருந்து இன்று வரை பயன்படுத்தும் சிம் கார்டு வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
சிம் கார்டு
1991 ஆம் ஆண்டு ஜெர்மன் ஸ்மார்ட் கார்டு தயாரிப்பாளர்களான ஹெர்மன் கீசெக் மற்றும் அல்போன்ஸ் டெவ்ரியண்ட்-யின் Giesecke+Devrient (G+D) நிறுவனத்தால் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை சிம் கார்டு, இப்போது நாம் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு (85.6 மி.மீ x 53.98 மி.மீ x 0.76 மி.மீ) அளவில் இருந்தது.
1. மினி சிம் (Mini SIM)
____________________________
2. மைக்ரோ சிம் (Micro SIM)
____________________________
3. நானோ சிம் (Nano SIM)
____________________________
4. இ-சிம் ( eSIM)
____________________________
விடைகள்:
1. 25 மி.மீ x 15 மி.மீ x 0.76 மி.மீ
2. 15 மி.மீ x 12 மி.மீ x 0.76 மி.மீ
3. 12.3 மி.மீ x 8.8 மி.மீ x 0.67 மி.மீ
4. 6 மி.மீ x 5 மி.மீ (இது மொபைல் சாதனத்தின் மதர்போர்டில் நேரடியாகப் பொருத்தப்பட்டிருக்கும் உட்பொதிக்கப்பட்ட சிப் (Embedded Chip))