PUBLISHED ON : ஆக 25, 2025

மென்பொறியாளர்கள் ஒரு வலைத்தளம் அல்லது செயலியை உருவாக்கப் பல நிரலாக்க மொழிகளைப் பயன்படுத்துவர். நிரலாக்க மொழிகள், முன்பக்க மொழிகள் (Frontend languages) மற்றும் பின்பக்க மொழிகள் (Backend languages) எனப் பிரிக்கப்படும். முன்பக்க மொழிகள் பயனர் இடைமுகத்தை (User Interface) உருவாக்கவும், வலைப்பக்கங்களின் தோற்றத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்தவும் பயன்படுகின்றன. பின்பக்க மொழிகள் சர்வர் பக்க (Server-side) புரோகிராமிங்கிற்கு, தரவுத்தள மேலாண்மை, API உருவாக்கம் மற்றும் வணிக தர்க்கத்திற்கு (Business Logic) பயன்படுகின்றன.
இங்கு சில நிரலாக்க மொழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எவை முன்பக்க மொழிகள், எவை பின்பக்க மொழி என்பதைக் குழுவாகச் சேருங்கள்.
விடைகள்:
முன்பக்க மொழிகள்
(Frontend languages):
சி.எஸ்.எஸ்(CSS),
எச்.டி.எம்.எல்(HTML), ரியாக்ட்(React),
எல்ம்(Elm).
பின்பக்க மொழிகள்
(Backend languages):
பி.எச்.பி(PHP),
ஜாவா(Java),
ரூபி(Ruby),
பெர்ல்(Perl).