PUBLISHED ON : ஜன 05, 2026

HTML எனும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் லாங்குவேஜ் என்பது இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன்படும் அடிப்படைக் குறியீட்டு மொழி. இந்த மொழி, ஒரு வலைத்தளத்தின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களான உரை, படங்கள், இணைப்புகள், அட்டவணைகள் உள்ளிட்டவற்றை வரையறுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் உள்ளடங்களை வரையறுக்க சில சிறப்பு குறியீடுகள் பயன்படுகின்றன.
இங்கு சில குறியீடுகளும், அவற்றின் செயல்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தச் செயல்பாடுகளுக்கு எந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சரியாகச் சேருங்கள்.
[ <form> , <tr> , <button> , <h1> , <a> , <ul>, <p> ]
1. உள்ளடக்கத்தை ஒரு பத்தியாக (Paragraph) வடிவமைக்கப் பயன்படுவது? _____________________
2. உள்ளடக்கத்தில் வரிசைப்படுத்தப்படாத (Unordered) பட்டியலை (புள்ளிகள் கொண்ட பட்டியல்) உருவாக்கப் பயன்படுவது? _____________________
3. ஆவணத்தின் மிக முக்கியமான (பெரிய) தலைப்புப் பகுதியை (Heading) வரையறுக்கப் பயன்படுவது? ___________________
4. உள்ளடக்கத்தில் பயனர் கிளிக் செய்யக்கூடிய பொத்தானை உருவாக்கப் பயன்படுவது? _____________________
5. அட்டவணையில் ஒரு வரிசையை வரையறுக்கப் பயன்படுவது? _____________________
6. பயனர் உள்ளீடுகளை (User Input) சேகரிப்பதற்கான படிவத்தை உருவாக்கப் பயன்படுவது? _____________________
7. மற்றொரு வலைப்பக்கம் அல்லது ஆவணத்திற்கான இணைப்பை (Hyperlink) உருவாக்கப் பயன்படுவது? _____________________
விடைகள்:
1. <p>
2. <ul>
3. <h1>
4. <button>
5. <tr>
6. <form>
7. <a>

