PUBLISHED ON : செப் 01, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரவுத்தளத்தை நிர்வகிக்கவும், தரவுகளைக் கையாளவும் பயன்படும் மொழிதான் SQL (Structured Query Language). இந்த மொழியில் உள்ள கட்டளைகள் அடிப்படையில் தான் தரவுகள் கையாளப்படுகின்றன. கீழே சில கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதன் சரியான பயன்பாடுகளுடன் பொருத்துங்கள்.
1. DROP: அ. பயனர்களுக்குத் தரவுத்தளத்தில் அணுகல் உரிமைகளை வழங்கும்.
2. UPDATE: ஆ. தரவு அட்டவணையை முழுமையாக நீக்கும்.
3. SELECT: இ. ஏற்கெனவே உள்ள தரவுகளை மாற்றி புதுப்பிக்கும்.
4. GRANT: ஈ. பரிவர்த்தனையை உறுதிப்படுத்தி, மாற்றங்களை நிரந்தரமாகச் சேமிக்கும்.
5. COMMIT: உ. அட்டவணையில் இருந்து குறிப்பிட்ட தரவுகளை மீட்டெடுக்கும்.
விடைகள்: 1. ஆ 2. இ 3. உ 4. அ 5. ஈ