PUBLISHED ON : செப் 08, 2025

இன்று ஒரு வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்வதற்கும், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கும், பல்வேறு வகையாக UPI செயலிகளைப் பயன்படுத்துகிறோம்.
UPI (Unified Payments Interface) என்பது ஒரு நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாகும். இது வங்கி கணக்குகளுக்கு இடையே பணப் பரிமாற்றத்தை எளிதாகவும் விரைவாகவும் செய்ய உதவுகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமாகப் பயன்படுத்தப்படும் சில UPI செயலிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை இந்தியாவில் முதன் முதலில் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன என்பதைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.
1. கூகுள் பே (Google Pay)
2. போன் பே (PhonePe)
3. பே டி.எம் (Paytm)
4. பிஎச்ஐஎம் (BHIM)
5. க்ரெட் (CRED)
6. மொபிக்விக் (MobiKwik)
விடைகள்:
1. செப்டம்பர், 2017 (அறிமுகப் பெயர் : Tez).
2. ஆகஸ்ட், 2016.
3. ஆகஸ்ட், 2010 (முதலில் மொபைல்,DTH ரீசார்ஜ் சேவை, UPI சேவை - 2016).
4. டிசம்பர், 2016 (இந்தியாவின் முதல் அதிகாரப்பூர்வ UPI செயலி).
5. ஏப்ரல், 2023.
6. மே, 2018.