sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 13, 2026 ,மார்கழி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

திறன் உலா: சுருக்கச் சொல் என்ன?

/

திறன் உலா: சுருக்கச் சொல் என்ன?

திறன் உலா: சுருக்கச் சொல் என்ன?

திறன் உலா: சுருக்கச் சொல் என்ன?


PUBLISHED ON : ஜன 12, 2026

Google News

PUBLISHED ON : ஜன 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்புகளில் ஒன்று. தினமும் கோடிக்கணக்கான மக்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் பயணச் சீட்டு வாங்குதல், முன்பதிவு செய்தல் உள்ளிட்ட அன்றாட பயன்பாடுகளில் சில சுருக்கச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கீழே சில பயன்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கச்சொல் என்ன என்பதைச் சொல்லுங்கள்.

1. பயணிகளின் விவரங்களும், பயணத் தகவல்களும் அடங்கிய பதிவு எண்ணிற்குப் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல்?

__________________

2. உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை கிடைக்காத நிலையில், ஓர் இருக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் வசதி?

__________________

3. முன்பதிவு இல்லாத சாதாரணப் பயணச் சீட்டுகளை வழங்கும் அமைப்பு?

__________________

4. அவசரப் பயணங்களுக்காக ஒரு நாளைக்கு முன்னதாக வழங்கப்படும் டிக்கெட் ஒதுக்கீடு முறை?

__________________

5. பயணச் சீட்டு முன்பதிவில் மிக அதிகமான முன்னுரிமை கொண்ட காத்திருப்போர் பட்டியலுக்குப் பயன்படுத்தப்படும் சுருக்கச் சொல்?

__________________

6. ரயில் பெட்டிகளில் உள்ள கீழ், நடு, மேல் படுக்கை வசதிகளைச் சுருக்கமாக எப்படிக் குறிப்பிடுவார்கள்?

__________________

விடைகள்:

1. PNR - Passenger Name Record

2. RAC - Reservation Against Cancellation

3. UTS - Unreserved Ticketing System

4. TQ - Tatkal Quota

5. GNWL - General Waiting List

6. LB / MB / UB - Lower / Middle/Upper Berth






      Dinamalar
      Follow us