PUBLISHED ON : பிப் 09, 2026

இன்றைய டிஜிட்டல் உலகில் நாம் பயன்படுத்தும் கணினி அல்லது அலைபேசியின் வேகத்தைத் தீர்மானிப்பதில் 'ரேம்' (RAM) முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் தகவல்கள் பரிமாறப்படும் வேகத்தைக் குறிக்கும் ஒரு தொழில்நுட்பம் தான் DDR. Double Data Rate என்பது இதன் விரிவாக்கம். ஒரு வினாடியில் இரண்டு முறை தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் திறன் கொண்டதால் இது 'இரட்டிப்பு வேகம்' (Double Rate) என அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு, புதிய தலைமுறைகள் (Generations) அறிமுகமாகின்றன. கீழே இதுவரை அறிமுகமான DDR தலைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் வேகம் என்ன என்பதைக் கண்டுப்பிடித்துச் சொல்லுங்கள்.
1. 2000இல் அறிமுகமான DDR? ______________
2. 2003இல் அறிமுகமான DDR2? ______________
3. 2007இல் அறிமுகமான DDR3? ______________
4. 2014இல் அறிமுகமான DDR4? ______________
5. 2020இல் அறிமுகமான DDR5? ______________
விடைகள்:
1. 200 MT/s முதல் 400 MT/s வரை.
2. 400 MT/s முதல் 1066 MT/s வரை.
3. 800 MT/s முதல் 2133 MT/s வரை.
4. 1600 MT/s முதல் 3200 MT/s வரை.
5. 4800 MT/s முதல் 8400 MT/s வரை.

