PUBLISHED ON : மார் 02, 2026

விண்வெளி அறிவியலில் ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஒரு வாய்ப்பு. ஆன்லைன் விண்வெளி வினாடி வினாவில் வெற்றி பெறுபவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்காக https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வெற்றி பெற்றவர்களுக்கு ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், விண்வெளி ஆய்வுகள் குறித்த புரிதலை வழங்கும் இலவசப் பயிற்சியை விஞ்ஞானிகள் அளிக்க உள்ளனர். மேலும் தகவல்கள், கீழே கேட்கப்பட்டுள்ள கேள்வி - பதில்களில் ஒளிந்துள்ளன.
1) 'யுவிகா 2026' (YUVIKA - YUva VIgyani KAryakram) திட்டத்தைச் செயல்படுத்துவது யார்?
அ) இஸ்ரோ, ஆ) யுனெஸ்கோ, இ) யுஜிசி.
2) எந்த வகுப்பு மாணவர்களுக்கான திட்டம் இது?
அ) 6, ஆ) 11, இ) 9.
3) எங்கெங்கு பயிற்சி அளக்கப்படும்?
அ) நாசா மையங்கள், ஆ) இஸ்ரோ மையங்கள், இ) ரோஸ்கோஸ்மோஸ் மையங்கள்.
4) இரண்டு வாரப் பயிற்சிக்கான காலகட்டம் எது?
அ) மே 11 - 22 வரை, ஆ) ஜூன் 11 - 22 வரை, இ) மார்ச் 11 - 22 வரை.
விடைகள்:
1) அ
2) இ
3) ஆ
4) அ

